பக்கம்:இலக்கிய மரபு.pdf/149

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நாவல் 145 அவர்களின் கலைப் படைப்பில் இடம் பெற்றுவிடும். ஆனால் அவற்றை வலியப் புகுத்திப் 'பிரச்சாரம்' போல் செய்யாம லிருத்தல் நல்லது. புலவரின் கொள்கைகளை நூலில் நுழைப்பதில் தவறு இல்லை; ஆனால் எவ்வாறு அவற்றை அமைத்துள்ளார் என்பது ஆராயத் தக்கது. படிப்பவர் தாமே உணர்ந்துகொள்ளத் தக்க வகையில் கதைக் கரு. விலோ, கதை நிகழ்ச்சிகளிலோ புலப்படுத்தலாம். இதுவே சிறந்த முறை என்பர். இதற்கு அடுத்த முறை ஒன்று உள்ளது. அதாவது கதைமாந்தரின் வாயிலாக அந்தக் கொள்கைகள் விளங்குமாறு செய்யலாம். ஆயின் அவ் வாறு செய்யும்போது மிக விழிப்பாக இருத்தல் வேண்டும். அந்தக் கொள்கைகள் அக்கதைமாந்தரின் பண்பு முதலிய வற்றோடு ஒட்டியனவாக இருத்தல் வேண்டும். அவ்வாறு ஒட்டி அமையாவிட்டால், அவர்கள் வாயிலாக உரைக்கப் படும் கொள்கைகள், கதைக்கு இயையாமல் புறத்தே நிற்கும்; அப்போது அவை கதையாசிரியர் வலியச் செய்யும் 'பிரச் சாரம்' எனக் கருதப்படும். " நாவலில் அரசியல் கொள்கைகளையும், சமயக் கொள்கை. களையும் சமுதாயக்கொள்கைகளையும் புகுத்தி எழுதக்கூடாது என்பது பழைய நாவலாசிரியர்களின் கருத்து. ஆனால் இந் நூற்றாண்டின் தொடக்கத்தில் புதிய நாவல்களில் அவை இடம் பெற்றன. அதனால் இரு சாரார்க்கும் இடையே சொற்போர்களும் நடைபெற்றன. அவற்றைப் புகுத்தி எழுதும் உரிமை இருந்தால் அல்லாமல், நாவல்களில் மக்களை உள்ளவாறு படைத்துக் காட்ட எங்களால் இயலாது. மக்க ளின் நம்பிக்கைகளையும் மற்றப் போக்குகளையும் எடுத் துரைக்காமல், அவர்களின் வாழ்க்கை நிகழ்ச்சிகளை மட்டும் வெறுங் கதைகள் ஆக்கிக் காட்டுவதில் பயன் என்ன ?" என்று எச்.ஜி.வெல்ஸ் முதலான நாவலாசிரியர் போராடினர்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/149&oldid=1681897" இலிருந்து மீள்விக்கப்பட்டது