________________
58 இலக்கிய மரபு தொடங்கினர். அதற்குமுன் எல்லா நாடுகளிலும் கதை கள் வழங்கிவந்தன. வாய்மொழிக் கதைகளும் இருந்தன; எழுதப்பட்ட கதைகளும் இருந்தன; வீட்டுப் பாட்டிமார் முதல் நாட்டுப் புலவர் வரையில் யாவரும் கதைகளைப் போற்றினர்; கதைகள் உரைநடையிலும் இருந்தன; செய் யுளிலும் இருந்தன; அவற்றுள் நீண்ட பெரிய கதைகளும் இருந்தன ; சுருங்கிய சிறிய கதைகளும் இருந்தன. ஆனால் அவை சிறுகதைகள் என்னும் பெயர்க்கு உரியன அல்ல. எட்கார் ஆலன் போவும் ஐரோப்பாவில் ரஷ்யா, பிரான்சு முதலிய பல நாட்டு அறிஞர்களும் (ஓ. ஹென்றி, மாப்பசான், செகோ முதலானவர்) ஒரு தனி மரபைப் போற்றி எழுதி வளர்த்தவைகளே சிறுகதை இலக்கியம் ஆயின. தமிழ் நாட்டில் சிறுகதை ஒருவகை இலக்கியமாக வள ரத் தொடங்கியது இந்நூற்றாண்டின் தொடக்கத்திலேயே ஆகும். ஆயினும் இது இந்த நாற்பது ஆண்டுகளுக்குள் நல்ல வளர்ச்சி பெற்றுள்ளது. தமிழ்மொழியில் இன்று தேர்ந்த சிறுகதை எழுத்தாளர் பலர் உள்ளனர். உலகத் துச் சிறுகதை இலக்கியத்தோடு போட்டியிடக்கூடிய செல் வத்தைத் தமிழ்மொழி பெற்றுவிட்டது எனலாம். மேலைநாட்டில் சிறுகதை ஒரு தனி இலக்கியமாக வளர் வதைக் கண்டு தமிழ்மொழியும் அந்தப் பேறு பெற வேண் டும் என்று ஆர்வம் கொண்டவர் வ.வே.சு.அய்யர். அவ ருடைய 'மங்கையர்க்கரசியின் காதல் முதலிய கதைகள்' மற்றவர்களின் முயற்சிக்கு எடுத்துக்காட்டாக அமைந்தன. வங்காளத்தில் தாகூர் எழுதிய சிறுகதைகள் தமிழ்நாட்டு அறிஞர்களுக்கு ஒருவகைத் தூண்டுகோலாகவும் எடுத்துக் காட்டாகவும் அமைந்தன. அவற்றைக் கண்ட பாரதியார் தாமும் தமிழில் சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற ஆர்வம் கொண்டார். ஆயின் வெற்றி பெறவில்லை.