பக்கம்:இலக்கிய மரபு.pdf/174

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

70

இலக்கிய மரபு

இலக்கணமாகக் கொள்ளப்பட்டது. ஆனால் இன்று சிறு கதை என்பது தனியான ஓர் இலக்கிய வகையாக வளர்ந்து சிறப்பிடம் பெற்றுவிட்டது. சென்ற நூற்றாண்டின் தொடக் கத்தில் தோன்றிய சிறுகதைகளே அவ்வாறு தனிவளர்ச்சி அமைத்துத்தந்தன எனலாம். அவர்களின் இலக்கிய முயற்சியால், சிறுகதைக்கு என ஓர் அழகான வடிவம் அமைவதாயிற்று. அந்த வடிவ அமைப்பாலேயே சிறு கதை இலக்கியச் சிறப்புப்பெற்றது. காலத்தின் விளைவு பழங் காலத்தில் தன்னுணர்ச்சிப் பாட்டுக்கள் பெற் றிருந்த இடத்தை இக்காலத்தில் சிறுகதை என்ற இலக்கிய வகை ஓரளவிற்குப் பெற்றுள்ளது எனலாம். இக்காலத்து நாவலாசிரியர் சிலர் முற்காலத்தில் இருந்திருப்பின், காவியப் புலவர்களாக இருந்திருப்பர்; அதுபோலவே, இக்காலத் துச் சிறுகதை ஆசிரியர்கள் சிலர் பழங்காலத்தில் வாழ்ந் திருப்பின், தனிப் பாட்டுக்கள் பல பாடும் கவிஞர்களாக இருந்திருப்பர். காலத்திற்கு ஏற்ப இலக்கியத்தின் வடி வமும் வளர்ச்சியும் மாறியமைவதையே இவற்றின் வாயி லாகக் காண்கிறோம். இக்காலத்து இலக்கிய வகைகளுள் மிக வேகமாக வளர்ந்துவருவது சிறுகதையே ஆகும்; பெரிதும் வரவேற் கப்பட்டுச் செல்வாக்காக உள்ளதும் அதுவே ஆகும். ய்வில்லாத நெருக்கடி மிகுந்த இக்கால வாழ்க் யில், விரைவில் படித்து முடித்து மகிழக் கூடியதாக யது அதற்குக் காரணம் ஆகும். வார இதழ்களும் இதழ்களும் வளர்ந்துள்ள வளர்ச்சியும் ஒரு the short story applared it resembled, mostly, a precis of -H. E. Bates, The Modern Short Story, p. 21.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/174&oldid=1681969" இலிருந்து மீள்விக்கப்பட்டது