பக்கம்:இலக்கிய மரபு.pdf/175

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

சிறுகதை 171 காரணம் எனலாம். எவ்வாறெனில், அந்த இதழ்கள் வெளியிட்டு ஒரே இதழில் முடிக்கக் கூடிய அளவில் அமையக் கூடியது சிறுகதையே. ஆகவே, கட்டுரைகளும் செய்திகளும் நகைச்சுவைத் துணுக்குகளும் ஆய்வுரைகளும் வெளியிடும் ஓர் இதழ், கதையும் வெளியிட விரும்பும்போது, அதற்கு உதவியாக உள்ளது சிறுகதையே. ஆதலின், வார இதழ்களும் திங்கள் இதழ்களும் பலவாய்ப் பெருகி வளர வளர, சிறுகதைகளும் மிகப் பல தேவையாகின்றன. சிறுகதை எழுதுவோர்க்கு நல்ல வாய்ப்பும் ஏற்படுகிறது. சிறுகதைகளைப் பலவகையாகப் படைத்து மகிழ்ந்து, ஏறக்குறைய நூறு கதைகளைத் தமிழுக்குத் தந்தவர் (சொ. விருத்தாசலம் என்னும்) புதுமைப்பித்தன். அடுத்த நிலையில் சிறு கதைகள் எழுதிப் புகழ் பெற்றவர்கள் கு.ப.ராஜகோபாலன், கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தி முதலான வர்கள். இன்று நம்மிடையே வாழ்ந்துவரும் சிறுகதை எழுத்தாளர் சிலர் அத்தகைய புகழ்க்கு உரியவர்கள். இவர்கள் எழுதும் சிறுகதைகள் வெறும் பொழுது போக்கிற்கு உரியனவாக மட்டும் நிற்காமல், இவர்களின் உள்ளத்து உணர்ச்சிக்கும் விழுமிய நோக்கிற்கும் இடந் தந்து அமைதல் காண்கிறோம். எங்கோ கற்பனை வானில் பறந்து பொழுது போக்காமல், வாழ்க்கைப் போராட்டங் களையும் சிக்கல்களையும் கற்பனை செய்து அழகாகப் படைத் துக் காட்டுதலால் இவை சிறந்து விளங்குகின்றன. அமெரிக்காவில் இன்று இருநூறாயிரத்திற்கு மேற் பட்ட சிறுகதை எழுத்தாளர் உள்ளனர் என்பர். தமிழ் நாட்டிலும் ஈராயிரம் மூவாயிரம் சிறுகதை எழுத்தாளர் உள்ளனர் எனலாம். ஒவ்வொரு நாட்டிலும் று மற்ற இலக்கியத் துறைகளில் ஈடுபட்டு எழுதுவே. விட, சிறு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/175&oldid=1681958" இலிருந்து மீள்விக்கப்பட்டது