பக்கம்:இலக்கிய மரபு.pdf/177

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

6. மரபு

அமையும் முறை

பறவை ஒரு காட்டிலிருந்து மற்றொரு காட்டிற்குச் சென்று வாழுமானால், பழைய காட்டின் தொடர்பை மறந்து விடுகிறது. அவ்வாறே புதிய இடங்களுக்கும் புதிய மரங் களுக்கும் சென்று வாழும்போதெல்லாம், பழைய இடங் களின் தொடர்பையும் மறந்துவிடுகின்றது. ஆனால் மனிதன் ஓர் ஊரிலிருந்தேனும் ஒரு நாட்டிலிருந்தேனும் வேறோர் ஊர்க்கும் வேறொரு நாட்டிற்கும் சென்று வாழ நேர்ந்தால், பழைய ஊர்த் தொடர்பையும் நாட்டுத் தொடர் பையும் மறப்பதில்லை. அந்த நினைவுகளுடனே புதிய இடத்து வாழ்வை நடத்துகிறான். மனிதன் படைக்கும் இலக்கியமும், காலத்திற்கு ஏற்பப் புதிய வடிவங்களைப் பெற்றபோதிலும், பழைய இலக்கியங்களின் தொடர்பையும் அடிப்படையையும் விடுவதில்லை. அவற்றையே இலக்கிய மரபு என்று கூறுதல் வழக்கம். இலக்கியத்தின் வர லாற்றை ஆராய்ந்தால், பழைய இலக்கியத்தின் செல் வாக்கு, மரபு என்ற பெயரால் இருந்துவருதலைக் காண லாம். அந்தச் செல்வாக்கு என்றும் ஒரே அளவாக இருப்ப தில்லை. புதிய இடத்தில் பழகப் பழக, பழைய ஊர் பற்றிய நினைவு சிறிது சிறிதாகக் குறைந்துவருதல் போல், புதிய இலக்கியங்கள் ஏற்பட ஏற்பட, பழைய இலக்கிய மரபுகளின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/177&oldid=1685225" இலிருந்து மீள்விக்கப்பட்டது