________________
இலக்கிய மரபு
பதினான்கு ஆதிபத் தொன்பான் காறும் எதிர்தரும் மடந்தை;மேல் ஆறும் அரிவை.
ஆறு தலையிட்ட இருபதின் மேல்ஓர் ஆறும் தெரிவை;எண்ணைந்து பேரிளம்பெண்.
சிற்றில், பாவை, கழங்கு, அம்மானை, ஊசல், கிளி, யாழ், புனலாட்டு, பொழில் விளையாட்டு முதலியன அந்தந்தப் பருவ மங்கையர்க்கு உரிய விளையாடல்களாக அமைத்துப் பாடுவர். முதலில் தோன்றிய உலாநூல் (சேரமான் பெருமாள் நாயனார் பாடியது). திருக்கயிலாய ஞானவுலா என்றும் ஆதியுலா என்றும் வழங்கப்படுவதாகும்.
மடல்
காதலியைப் பெற முடியாமல் ஏமாற்றம் அடைந்து தன்னைத்தான் ஒறுத்து அழித்துக்கொள்ளும் காதலனுடைய மனநிலையை 'மடல்' என்னும் பெயரால் பாடி வந்தனர். பனைமடல்களால் குதிரை வடிவாகச் செய்து, அதன்மீது இருந்து, தான் விரும்பிய நங்கையின் உருவம் தீட்டிய கிழியை ஏந்தி, ஊரறியத் துன்புறுதலை மடல் ஏறுதல் என்னும் அகப்பொருள் துறையாகக் கூறுவர். மடல் ஏறித் துன்புறுவதைக் கூறுவது அல்லாமல், மடல் ஏற முயல்வதாகக் கூறுவதும் உண்டு. அம் முயற்சி —
- இலக்கண விளக்கப் பாட்டியல், 487- 491.
- பன்னிரு பாட்டியல், 137.
பொருளறம் வீடு பழித்தின்ப மேபொருள் ஆக்கிநல்லார் அருள்பெறு வேட்கை மடல்மிக ஊர்தலின் பாட்டுடையோர்க்கு உரிதரு பேரிற் பெயருக் கிசைந்த எதுகையினால் வருகலி வெண்பாத் தனைமட லாக வகுத்தனரே. -நவநீதப் பாட்டியல், 47.