பக்கம்:இலக்கிய மரபு.pdf/180

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

176 இலக்கிய மரபு தரை, மேலே நீல வானம் அல்லது முகில்கூட்டம் ஆகியவை இருந்தே தீரும். ஒருவனும் ஒருத்தியும் காதல் கொண்டு பார்க்கின்றனர் என்றால், இடம் சூழல் முதலியன எல்லாம் உண்டு என்பது தானாகவே விளங்குகிறது. இவையே பின்னணி என்று கூறப்படுவன. காதல் பற்றிய அகப் பொருட் பாட்டுக்களில் இவற்றை முதற் பொருள் என்றும் கருப் பொருள் என்றும் இருவகையாகப் பகுத்து விளக்கு கிறார் தொல்காப்பியனார். பின்னணியின் இன்றியமையாமை உணர்ந்தே, நாடக மேடையில் நடிப்பவரும், உலகத்தை விட்டு வெட்ட வெளியில் நடிப்பவர் போல் நடிக்காமல், உலக வாழ்வில் உள்ள பின்னணி விளங்க, பின்னும் பக்கமும் திரைகள் விட்டு அழகுபடுத்துகின்றனர். காடு மலை வீடு புறந் திண்ணை தெரு சந்தை முதலியவற்றில் இன்ன இடம் என்று விளங்கும் வகையில் ஏற்ற திரைகள் அமைத்து நடிக்கின்றனர். ஓவியம் எழுதுவோரும் பின்னணியின் ே தவையை உணர்ந்து எழுதுகின்றனர். ஒரு காக்கை கரைவது போல் படம் தீட்டுவதாயின், படத்தில் தனியே ஒரு காக்கை வாய் திறந்து நிற்பதில்லை; ஒரு மரத்தின் கிளையிலோ, வீட்டின் முகப்பிலோ, சுவரின் மீதோ, கற்பாறையின் மீதோ காக்கை இருப்பதாகப் படம் எழுதப்படுகிறது. இவ்வாறு எழுதப்படும் பின்னணி, உலகில் உள்ள வாறே அமைதல் தக்கது; கலைஞரின் உள்ளம் விழைந்த வாறே அமைதலும் தக்கதே ஆகும். தாமரையின் ஓவியம் தீட்டுவோன், மருதநிலச் சூழல் தோன்ற எழுதல் வேண் டும்; மலையோ காடோ பாலையோ எழுதிப் பயன் இல்லை ; வயலும் குளமும் விளங்க எழுதல் வேண்டும். மானின்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/180&oldid=1681925" இலிருந்து மீள்விக்கப்பட்டது