பக்கம்:இலக்கிய மரபு.pdf/182

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

178 இலக்கிய மரபு தனித்து வருந்தும் காதலியின் கண்ணெதிரே ஒரு மரக் கிளையில் ஆணும் பெண்ணுமாக இரண்டு பறவைகளைக் காட்டலாம்; அல்லது கொடி பின்னிச் சூழ்ந்த மரத்தைக் காட்டலாம். கலைஞரின் கற்பனை தனிமைத் துன்பத்தை எடுத்துக்காட்டுவதாக இருப்பினும், மற்ற உயிர்கள் துணை யோடு கூடி வாழும் வாழ்வு காதலியின் ஏக்கத்தை மிகுதிப் படுத்த வல்லது ஆகையால், இந்தப் பின்னணியும் பொருந்துவதாகும். இது முரணாம் பின்னணி எனப்படும். காதலன் பிரிந்து போகின்ற வழி பாலைவழி. அவன் தன் துணைவியைப் பிரிந்து அந்தக் கொடிய வழியில் போகின்றான். அவனுடைய உள்ளத்தில் அன்பு இல்லா மற் போகவில்லை. அன்பு இருந்தும், துணைவியைப் பிரிந்து போகின்றான். அந்தக் காட்டுவழியில் காணும் காட்சியோ வேறு வகையாக உள்ளது. யானைகள் தின்பதற்குத் தழை யும் குடிப்பதற்கு நீரும் அற்ற காடு அது. ஆயினும் அவை ஒன்றை விட்டு ஒன்று பிரியாமல் அன்பாக வாழ்கின்றன. உணவு இல்லாத அந்தக் காட்டிலும், கிடைத்த உணவைக் கொண்டு பசியைப் போக்கிக்கொண்டு துணையாக இருந்து வாழ முயல்கின்றன. யா மரத்தில் தழை இல்லை. ஆயினும் பட்டைக்கு அடியில் உள்ள நாரில் ஈரம் இருப்பது யானை களுக்குத் தெரியும். ஆண் யானை பட்டையை உரித்துப் பெண் யானைக்குக் கொடுத்து அதன் பசியைத் தீர்க்க முயல்கிறது பிடிபசி களைஇய பெருங்கை வேழம் மென்சினை யாஅம் பொளிக்கும் அன்பின தோழி அவர் சென்ற ஆறே. வளமான ஊரிலிருந்தும், துணைவியைப் பிரிந்து தனியே வளமற்ற காட்டுவழியே செல்லும் தலைவனது நிலையைக் குறுந்தொகை, 37.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/182&oldid=1681938" இலிருந்து மீள்விக்கப்பட்டது