________________
மரபு 179 அன் காட்டுவதற்கு இந்தக் காட்சி பின்னணியாக அமைந்தது. வளமற்ற காட்டிலிருந்தும் துணையைப் பிரியாமல் பான வாழ்க்கை நடத்தும் யானைக் குடும்பம் முரணாக அமைந்தது. ஆதலின் பின்னணி சிறப்புடையதாயிற்று. 1.* பிரிந்து போகும் காதலர் தன்னைப் பற்றி நினைக்காமல் மறந்துவிட்டாரோ என்று எண்ணி ஏங்குகிறாள் காதலி. காதலன் செல்லும் காடு பின்னணியாகப் பாடப்படுகிறது. அந்தக் காட்டில் வழிப்போக்கரின் உயிரைப் போக்க அம்பு தீட்டிக் கூர்மை பார்க்கும் கொடிய கள்வர்கள் வாழ்வதாகக் கொடுமை கூறப்படுகிறது. அந்தக் கொடுமைக்கு இடை யிலும் அன்பான வாழ்க்கை நடத்தும் இரண்டு பல்லிகள் காட்டப்படுகின்றன. கள்ளி கிளையில் இருந்தவாறு பல்லி தன் துணையை அழைக்கும் குரல் கேட்கின்றதாம். அந்தப் பல்லி அழைக்கும் ஒலி, கள்வர் அம்பு தீட்டும் ஒலி போல் கேட்கின்றதாம்: உள்ளார் கொல்லோ தோழி கானவர் பொன்புனை பகழி செப்பம் கொண்மார் உகிர்நுதி புரட்டும் ஓசை போலச் செங்காற் பல்லி தன்துணை பயிரும் அங்காற் கள்ளியங் காடிறந் தோரே.† ஆறறிவுடைய காதலன் மறந்தாரோ என்று ஏங்கும் ஒருத்தி யின் உணர்ச்சியை, கொடிய சூழலிலும் துணையை மறக்கா மல் அழைக்கும் சிற்றுயிரான பல்லியின் குரல் மிகுதிப் படுத்திக் காட்டுகிறது.
- தொல்காப்பியனார் இதனை,
அன்புறு தகுந இறைச்சியுள் சுட்டலும் வன்புறை யாகும் வருந்திய பொழுதே (தொல். பொருளியல், 37.) என்று ஓதியுள்ளார். † குறுந்தொகை, 16.