பக்கம்:இலக்கிய மரபு.pdf/185

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 181 திருமண முயற்சியில் முனைந்தான். முதலில் முயற்சி கை கூடுவது அரிதாக இருந்தது. பிறகு, கைகூடுவதாக ஆகிறது. திருமணநாளும் நெருங்குகிறது. இதற்கு அமைந்த பின்னணியாவது: நீண்டு வளர்ந்த பனைமரங்களின் அடி யில் மேற்காற்று மணலைச் சேர்த்துச் சேர்த்துக் குவித்து மேடு ஆக்கியது. அந்த மேடு வளர்ந்த காரணமாக பனை மரங்களின் அடிப்பகுதிகள் மணலில் புதையவே, நீண்ட மரங்கள் குறுகிவிட்டன போல் தோன்றுகின்றன: ஆடரை புதையக் கோடை இட்ட அடும்பிவர் மணற்கோடு ஊர நெடும்பனை குறிய வாகும் ... திரு திருமண முயற்சி பெரிதும் கைகூடிவந்தது. மண ஏற்பாடு செய்யப்பட்டதாகச் செய்தி வருகிறது. இது வரையில் ஊராரின் பழிக்கு அஞ்சி அடங்கிவந்த காதலியின் உள்ளம் பெரிதும் மகிழ்கிறது. குறை உடைய தன் வாழ்க்கை பலவகையாலும் நிறைவுற்றதாக உணர்ந்து மகிழ்கிறாள். இதற்குப் பின்னணியாக அமைந்த காட்சி பலாமரத்தில் வேர்,அடிப்பகுதி,கிளை ஆகிய எங்கும் கட் டித்தொங்க வைத்தாற் போல் பலாப்பழங்கள் நிறைந்துள்ள காட்சியாகும். பழச்சுமை தாங்காமல் மரமே சாய்ந்து வளைந்துள்ள தாம்: வேரும் முதலும் கோடும் ஒராங்குத் தொடுத்த போலத் தூங்குபு தொடரிக் கீழ்தாழ் வன்ன வீழ்கோட் பலவின் ஆர்கலி வெற்பன் ... காதலியின் நல்வாழ்வுக்கு உரிய நற்செய்தி போல் பக் த்து வீட்டுக்காரி ஒன்று சொன்னாள். அந்தச் சொல்லால்

  • குறுந்தொகை, 248.

†ஷ- 257. 12

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/185&oldid=1681951" இலிருந்து மீள்விக்கப்பட்டது