பக்கம்:இலக்கிய மரபு.pdf/187

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மரபு 183 தொல்காப்பியனார் இலக்கியத்தில் அமையத் தக்க பொருளைப் பற்றியும் மரபுகளையும் கூறியுள்ளார்; இலக்கி யம் பெறத் தக்க வடிவுகளைப் பற்றிய மரபுகளையும் கூறி யுள்ளார். பொருள்பற்றிய மரபுகள் அகத்திணை (காதல் ஒழுக்கம்) குறிஞ்சி முல்லை மருதம் நெய்தல் பாலை என ஐவகைப்படும் என்றும், ஒருதலைச் சார்பான காதலும் பொருந்தாக் காதலுமாகிய கைக்கிளையும் பெருந்திணையும் சேர்ந்து அகப்பொருள் ஏழு திணையாகப் பாடப்படும் என்றும் கூறியுள்ளார். அவற்றைப் பாடும் பொழுது முதற்பொருள் கருப்பொருள் உரிப்பொருள் என்ற மூன்றும் பயிலும் என்றும் கூறியுள்ளார். நிலம் பொழுது தெய்வம், உணவு முதற்பொருள் விலங்கு, மரம், பறவை, தொழில், யாழ், பறை முதலியன. காதல் ஒழுக்கமாகிய கூடல் முதலியன } கருப்பொருள் } உரிப்பொருள் தொல்காப்பியர் கூறியுள்ளவாறு, அகத்திணை ஏழும் புறத்திணை ஏழும் பின்வருமாறு ஆகும்:- அகம் புறம் நிலம் பொழுது 1. குறிஞ்சி வெட்சி மலையும் கூதிர்காலம் காதலர் கூடல் பகைவர் மலைசார்ந்த முன்பனிக் பசுக்கவர்தல் பகுதியும் காலம் நள்ளிரவு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/187&oldid=1681946" இலிருந்து மீள்விக்கப்பட்டது