இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
________________
ஆண்களுக்கே உரியது என்றும், பெண்களுக்கு உரியது அன்று என்றும் மரபு வகுத்தனர்.
காமம் உழந்து வருந்தினார்க்கு ஏமம் மடல் அல்லது இல்லை வலி கடலன்ன காமம் உழந்தும் மடலேருப் பெண்ணின் பெருந்தக்கது இல்*
என்று திருவள்ளுவர் கூறியுள்ளார்.
மடல்மாப் பெண்டிர் ஏறார் ஏறுவர் கடவுளர் தலைவ ராய்வருங் காலே.
எனப் பிற்காலத்தில் அம்மரபிற்கு விதிவிலக்கும் அமைத்தனர். அவ்வாறு விலக்கு அமைத்தமைக்குக் காரணம், சங்க இலக்கியத்திற்குப் பிறகு திருமங்கையாழ்வாரின் பாடல்களில் கண்ட மாறுதலே ஆகும். அவர் தம்மைப் பெண்ணாகவும் கடவுளைத் தலைவனாகவும் கற்பனை செய்து பாடிய பெரிய திருமடல், சிறிய திருமடல் என்னும் பாட்டுக்களில் காதலி மடலேறுவதாகக் கூறியுள்ளார்.
சீரானைச் செங்கண் நெடியானைத் தேன் நுழாய்த் தாரானைத் தாமரைபோல் கண்ணானை எண்ணருஞ்சீர்ப் பேரா யிரமும் பிதற்றிப் பெருந்தெருவே ஊரார் இகழிலும் ஊராது ஒழியேன்நான் வாரார்பூம் பெண்ணை மடல்
என்று சிறிய திருமடலில் பெண் மடலேறத் துணிந்தது. காணலாம். இது மரபுக்கு மாறாக உள்ளது என்பதைத் திருமங்கை. யாழ்வாரே பெரிய திருமடலில் குறிப்பிட்டுள்ளார். —
- திருக்குறள்
- பன்னிரு பாட்டியல், 147