________________
பாகுபாடு 21 அவற்றுள் பின்னதே இடைக்காலத்தில் திருப்பள்ளி யெழுச்சி என வழங்கப்பட்டது. மாணிக்கவாசகர் பாடிய திருப்பள்ளியெழுச்சியும் தொண்டரடிப்பொடியாழ்வார் பாடிய திருப்பள்ளியெழுச்சியும் இங்குக் குறிக்கத் தக்கன. இந்த நூற்றாண்டின் புலவராகிய பாரதியாரும் பாரதமாதா திருப்பள்ளியெழுச்சி என்பதைப் பாடியுள்ளார். போற்றிஎன் வாழ்முதல் ஆகிய பொருளே புலர்ந்தது பூங்கழற்கு இணைதுணை மலர்கொண்டு ஏற்றிநின் திருமுகத்து எமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலருந்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே ஏற்றுயர் கொடியுடை யாயெனை உடையாய் எம்பெரு மான்பள்ளி எழுந்தரு ளாயே. கதிரவன் குணதிசைச் சிகரம்வந் தணைந்தான் கனவிருள் அகன்றது காலையம் பொழுதாய் மதுவிரிந் தொழுகின மாமலர் எல்லாம் வானவர் அரசர்கள் வந்துவந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர் இவரொடும் புகுந்த இருங்களிற்று ஈட்டமும் பிடியொடு முரசும் அதிர்தலில் அலைகடல் போன்றுள தெங்கும் அரங்கத்தம் மாபள்ளி எழுந்தரு ளாயே. பொழுது புலர்ந்தது யாம்செய்த தவத்தால் புன்மை இருட்கணம் போயின யாவும் எழுபசும் பொற்சுடர் எங்கணும் பரவி 2 எழுந்து விளங்கியது அறிவெனும் இரவி