பக்கம்:இலக்கிய மரபு.pdf/37

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

பாகுபாடு 33 ஒன்றிய பாட்டுக்களாகும்.(ஆங்கிலத்தில் lyric என்னும் சொல்லுக்கு வீணை இசைத்துப் பாடும் பாட்டு என்னும் பொருள் இருந்தது. இப்பாட்டுக்கள் இசையுடன் பாடப் படுவன ஆதலின் அவ்வகையிலும் பொருந்தி கின்றன). நாடகப் போக்கு அமை. சங்கப் புலவர்கள் அகப்பாட்டுக்களாகப் பாடியுள்ளவை- எல்லாம், பாடிய புலவரின் சொந்த உணர்ச்சிகளைப் பற்றியன அல்ல. புலவர் படைத்துக் கொண்ட காதலன், காதலி, தோழி முதலியோருடைய உணர்ச்சிகளையே அகப்பாட்டில் பாடியுள்ளனர். ஆகவே, நாடக ஆசிரியர் கற்பனையாகச் சில மாந்தரைப் படைத்து அவர்களைப் பேசச் செய்வது போல், பழந்தமிழ்ப் புலவரும் காதலி காதலன் முதலானோ ரைப் படைத்து, அவர்களின் உணர்ச்சிகளை அவர்கள் வாயிலாகவே புலப்படச் செய்துள்ளார். ஆதலின் அகப்பாட்டுக்கள் எல்லாம் கற்பனை மாந்தரின் உணர்ச்சி களாக இருக்கக் காணலாம். அவற்றில் புலவரின் கூற்றுக் கள் இல்லை; புலவர் படைத்த கற்பனை மாந்தரின் கூற்றுக் களே உள்ளன. அவற்றில் புலவர் மறைந்து நிற்க,அவர் படைத்த கற்பனை மாந்தரே பேசக் காண்கின்றோம். அவ் வாறு புலவர் தம் சொந்த உணர்ச்சிகளைப் பாடாமல், தாம் படைத்த கற்பனை மாந்தரின் உணர்ச்சிகளைப் பாடும் பாட்டுக்கள் நாடகப் பாட்டுக்கள் (dramatic poetry) எனப் படும். இவற்றை நாடகத் தன்னுணர்ச்சிப் பாட்டு (dramatic lyric), நாடகக் கதைப் பாட்டு (dramatic story), நாடகத் தனி மொழிப்பாட்டு (dramatic monologue or solioquy) என

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/37&oldid=1681811" இலிருந்து மீள்விக்கப்பட்டது