பக்கம்:இலக்கிய மரபு.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

35 இலக்கிய மரபு தன்னைப் புறம்பழித்து நீவமற்று என்னைக் கடைக்கண்ணால் கொல்வான்போல் நோக்கி நகைக்கூட்டம் செய்தான் அக் கள்வன் மகன். புலவர் படைக்கும் கற்பனை மாந்தர் ஒருவர் தாமே தனியே கூறிக்கொள்வதாகப் பாடுதல் நாடகத் தனிமொழிப் பாட்டாகும். இல்லோன் இன்பம் காமுற் றாஅங்கு அரிதுவேட் டனையால் நெஞ்சே! காதலி நல்லள் ஆகுதல் அறிந்தாங்கு அரியள் ஆகுதல் அறியா தோயே. என்னும் பாட்டில், புலவர் படைத்த காதலன் தன் ஏமாற் றத்தையும் துன்பத்தையும் தன் நெஞ்சிற்குக் கூறுவதாக அமைதல் காண்க. சுருக்கமும் பெருக்கமும் தன்னுணர்ச்சிப் பாட்டுக்கள் பெரும்பாலும் சுருக்கமாக வும் செறிவாகவும் அமையும் என்பர். புலவர் தம் சொந்த உணர்ச்சியைச் சில பாட்டுக்களால் செறிவாக உணர்த்த வேண்டும்; வெளி யுலகத்தைப் பற்றிய நோக்கம் கொள்ள லாகாது; உள் நோக்கமே வேண்டும். மிகப் பல பாட்டுக் களால் உணர்ச்சியை விரிவுபடுத்த முயன்றால், உணர்ச்சி சிதையும் ; உள்ளத்தின் உண்மை நிலையை விளக்க இயலாமற் போகும்.

  • கலித் தொகை, குறிஞ்சிக்கலி, 15.

குறுந்தொகை, 120. The lyric writer is concerned to express rather than describe, instead of looking out at the world, he looks inward and tries to say what he himself feels and thinks. - P. H. B. Lyon, The Discovery of Poetry, p. 85.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/40&oldid=1681825" இலிருந்து மீள்விக்கப்பட்டது