பக்கம்:இலக்கிய மரபு.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பாகுபாடு 37 நாடகப் பாட்டுக்களாக (dramatic poetry) உள்ள பழங் காலத்து அகப்பொருள் பாட்டுக்களும் புலவர் கற்பனை செய்த மாந்தரின் உணர்ச்சிகளைப் பற்றியன ஆதலின், சிறு பாட்டுக்களாகவே அமைந்தமை காணலாம். முல்லைப்பாட்டு, குறிஞ்சிப்பாட்டு ஆகியவை அவ்வகை யான அகப்பொருள் பாட்டுக்கள் ஆயினும், நீண்டு அமைந் துள்ளனவே எனின், அவற்றில் உணர்ச்சி பற்றிய பகுதி கள் மிகச் சில அடிகளாகவே இருத்தலையும், வருணனை பற் றிய பகுதிகளே மிகப் பல அடிகளாக நீண்டிருத்தலையும் காணலாம். பாட்டு என்ற கலையின் எல்லைங்கள் அமை யாத விளக்கப் பகுதியும் குறிஞ்சிப்பாட்டில் இருத்தல் காண லாம். தொண்ணூற்றாறு வகைப் பூக்களின் பெயர்களை மட்டும் பட்டி போல் தந்து செல்லும் பகுதி அவ்வாறு உள்ள தாகும்.* அடிமுதல் முடிவரையில் (பாதாதி கேசம்) என்றும், முடிமுதல் அடிவரையில் (கேசாதி பாதம்) என் றும் வருணிக்கும் வருணனைப் பகுதிகளாகச் சில காவியங் களில் வருவனவும் அத்தகையனவே. உலா என்னும் நூல் வகையில் அமையும் மகளிரின் உடல் வருணனைப் பகுதி களும் அவ்வாறு கருதத் தக்கனவே. உள்ளத்தில் எழுந்த உணர்ச்சி, மிகப் பல பாட்டுக் களாக, நீண்ட காவியமாக அமைய முடியாது. மிகப் பல பாட்டுக்கள் தொடர்ந்து எழுதுவதற்கு உரிய உணர்ச்சிப் பெருக்கம் வாய்ப்பதில்லை. அந்நிலையில் காவியம் முதலிய வற்றில் இயல்பான உணர்ச்சியோடு செயற்கையாகச் சில வருணனை முதலியவற்றையும் சேர்க்க வேண்டி நேரும். ஆழ்ந்த உணர்ச்சி உள்ளபோது இத்தகைய செயற்கை வருணனை. முதலியவற்றிற்கு இடமே இல்லை. உணர்ச்சி வெள்ளம் தணிந்த பிறகே இவ்வாறு பிறவற்றைத் தேடிச்

  • குறிஞ்சிப்பாட்டு, 62.114.

3

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/41&oldid=1681795" இலிருந்து மீள்விக்கப்பட்டது