பக்கம்:இலக்கிய மரபு.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

39 இலக்கிய மரபு சேர்த்து நீண்ட நூலாக அமைக்கும் முயற்சியில் ஈடுபட முடியும். ஆழ்ந்த உணர்ச்சியின்போது பிறர்க்கு இன்பம் பயக்கும் வழி தேடவோ சுவைகளைச் செயற்கையாக அமைக்க முயலவோ வழி இல்லை என்பர் அறிஞர் ஷார்ப். தன்னுணர்ச்சிப் பாட்டு தன்னுணர்ச்சிப் பாட்டே மிகப் பழைய இலக்கிய வகை என்பர். இன்றும் அதுவே பெரு வழக்கிற்றாகவும் மிகத் தூயதாகவும் விளங்குகிறது என்பர். அந்தப் பாட்டு, தொடக்கத்தில் தனி ஒருவரின் உணர்ச்சி வெளிப்பாடாக அமையாமல், ஒரு கூட்டத்தினரின் உணர்ச்சியை வெளிப் படுத்துவதாக அமைந்தது என்பர் சிலர். பலர் சேர்ந்து குரவைக்கூத்து ஆடிப்பாடுதலும், வானத்தை வாழ்த்திப்

  • Effort long sustained implies the presence of conscious purpose. The impulse to poetic composition is, I believe, in the first instance. spontancous, almost unconscious ; and where the inspiration, as we call it, is most strong and deep, there a conscious purpose is least present ...... while the inspiration is at its strongest, the thought of giving pleasure to others or of winning praise for himself is - J. C. Shairp, Aspects of Poetry, p. 13.

weakest. †The lyric is the most nearly universal form of poetry......It is the purest, nost typical form of poetry. - C. T. Winchester, Some Principles of Literary Criticism, p. 275. W. H. Hudson, An Introduction to the Study of Literature, T. 317-19. சீ குரவை என்பது கூறுங் காலைச் செய்தோர் செய்த காமமும் விறலும் எய்த உரைக்கும் இயல்பிற்று என்ப. சிலப்பதிகாரம், பதிகம், 77, அடியார்க்குநல்லார் உரை- குரவை என்பது எழுவர் மங்கையர் செந்நிலை மண்டலக் கடகக் கைகோத்து அங்நிலைக் கொட்பநின்று ஆட லாகும். -.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/42&oldid=1681922" இலிருந்து மீள்விக்கப்பட்டது