பக்கம்:இலக்கிய மரபு.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

40 இலக்கிய மரபு வாழ்கின்றன. ஒரு காலத்தில் வேறு பயன்களுக்குக் கருவி யாக விளங்கிய அவை, இன்று அப் பயன்களின் தொடர்பு இல்லாமல், தாமே கலையாக நின்று பயன் நல்குகின்றன. பத்துப்பாட்டுள் ஒன்றாகிய குறிஞ்சிப்பாட்டு என்பது வேறு ஒரு பயன் கருதியே பாடப்பட்டது; ஆரிய அரசன் பிரகத்தனைத் தமிழ் அறிவித்தற்காகப் பாடப்பட்டது என்று பழைய குறிப்புத் தெரிவிக்கிறது. ஆயினும் இன்று அப் பயனை மறந்தே பாட்டுப் படிக்கப்படுதல் காணலாம். சங்க நூல்களிலும் நேர் இலக்கியமும் உண்டு; சார்பு இலக்கியமும் உண்டு. புறநானூற்றில் சில பாட்டுக்கள் பரிசு பெறும் நோக்கத்துடன் பாடப்பட்டவை ஆதலின் சார்பு இலக்கியம் எனப்படும். பதிற்றுப்பத்திலும் பத்துப் பாட்டிலும் அத்தகையன உண்டு. அகப்பொருள் பற்றிய பாட்டுக்கள் பல, அவ்வாறு வேறு பயன் கருதாமல் பாடியன ஆதலின் நேர் இலக்கியம் எனப் போற்றத் தக்கன. ஆயின், அகப்பொருள் பாட்டுக்களிலும், ஒரு சில பாட்டுக்கள், காதலின் சிறப்பே நோக்கமாகக் கொள்ளாமல், வேறு பயன் கருதியனவோ என்று எண்ணத் தக்கவாறு அமைந்துள்ளன. எடுத்துக்காட்டாக, உள்ளூர் மாஅத்த முள்எயிற்று வாவல் ஓங்கல அஞ்சினைத் தூங்குதுயில் பொழுதின் வெல்போர்ச் சோழர் அழிசியம் பெருங்காட்டு நெல்லியம் புளிச்சுவைக் கனவி யா அங்கு அதுகழிந் தன்றே தோழி அவர்நாட்டு சிறுகுடிப் பரதவர் மகிழ்ச்சியும் பெருந்தண் கானலும் நினைந்தஅப் பகலே. என்பதனுள், தலைவி தன் ஏக்கத்தையும் ஏமாற்றத்தையும் ஒரு வாவலின் (வவ்வாலின்) கனவோடு ஒப்பிட்டுக் *நற்றிணை,87

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/44&oldid=1681903" இலிருந்து மீள்விக்கப்பட்டது