பக்கம்:இலக்கிய மரபு.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

42 இலக்கிய மரபு சிலர் இலக்கியத்திலும் நாட்டியத்திலும் கற்பனையில் மிதப் பதை (romanticism) விரும்பி, நாடகத்தில் மட்டும் உண்மை மிகுந்ததை (realism) விரும்புதல் உண்டு. காவியம், கதை, நாடகம் முதலிய இலக்கிய வகைகளில் உண்மை மிகுந்தன வும் (realistic literature) உண்டு ; கற்பனை மிகுந்தனவும் (romantic literature) உண்டு. முன்னைய வகையில் பொருள் களைப் பற்றிய கருத்துக்களும் புலவர் உணர்த்தும் உணர்ச்சி களும் கலந்திருக்கும்; பின்னைய வகையில் உணர்ச்சிகள் மட்டுமே சிறந்து விளங்கும். இயற்றும் புலவர் உண்மை நாட்டம் மிகுந்தவராயின், அவருடைய படைப்பு முன்னைய தாகும்; அவர் கற்பனை நாட்டம் மிகுந்தவராயின், அவரு டைய படைப்புப் பின்னையதாகும். உண்மையும் இந்த இருவகை இலக்கியத்திலும் உண்டு; கற்பனையும் உண்டு. எந்த நாட்டம் மிக்குவிளங்கு. கிறது என்பது அறிந்து அதனால் சிறப்பிக்கப்படும். உண்மை நாட்டம் உடைய புலவர், வாழ்க்கையில் பொது வாக உள்ளவற்றைக் கூற விரும்புவார்; அவற்றையே கற்பனை செய்வார். கற்பனை நாட்டம் உடைய புலவர். பொதுவான கூறுகளை விட்டு, விதிவிலக்காக, சிறப்பியல் பாக வருவனவற்றைக் கூற விரும்புவார்; அவற்றையே மிகப் புனைந்து கூறுவார். தன்னுணர்ச்சியை வெளியிடுதலே நோக்கமாக உடைய புலவர், கற்பனையில் மிகுதியாக ஈடுபட்டுவிடுகிறார் என்றும், பொருளின் உண்மைகளை விடத் தம் மனநிலைகளையே பெரிதும் மதிக்கிறார் என்றும் ஆபர்கிராம்பே கூறுவர். அதற்கு மாறாக, பொருள்களின் உண்மையை உணர்த்துதலே நோக்கமாக உடைய புலவர், கற்பனையில்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/46&oldid=1681932" இலிருந்து மீள்விக்கப்பட்டது