________________
64 இலக்கிய மரபு அவற்றில் காணப்படும்.* புனைந்து சேர்த்த பகுதிகள் இல்லை எனினும், அவர்கள் தந்த மெருகு உண்டு என்பதில் ஐயம் இல்லை. நிகழ்ந்த நிகழ்ச்சிகள் இன்னவை என்று உள்ளவாறு அறிவிக்காவிடினும், பழங்கால மக்கள் நம்பிய நம்பிக்கைகளைப் பற்றியும் உணர்ந்த உணர்ச்சிகளைப் பற்றியும் அறிவிப்பதால், அவைகள் வரலாறு போல் போற்றத் தக்கனவே ஆகும். கற்பனை பெருகாமை ஆனால் காவியம் தோன்றுவதற்கு வேண்டிய வீரவழி பாட்டுப் பாட்டுக்கள் நீண்டனவாகவும் தொடர்ந்து அமைந் தனவாகவும் இருத்தல் வேண்டும். புறநானூற்றில் உள்ள கையறுநிலைப் பாட்டுக்கள் முதலியன அளவில் சிறியன வாகவும் ஒன்றோடொன்று தொடர்பு அற்றனவாகவும் துண்டு துண்டாகவும் உள்ளன. அவ்வாறு அளவுபட்டு அமைந்துவிட்டதற்குக் காரணங்கள் யாவை ? பாடிய புல வரின் உணர்ச்சி அந்த ஒரு நிகழ்ச்சியின் அளவில் ஆழ்ந்து குறுகி நின்றமையும், அதைக் கடந்து புறநோக்குப் பெற்றுக் கற்பனை கலந்து விரிவு பெறாமையும் காரணம் என்பர். ஒரு The greatest enemy of historical accuracy is the creative and artistic spirit which likes to impose its own shape and pattern on given materials and to make something new out of them. -C. M. Bowra, Heroic Poetry, p. 519. Its materials are largely historical, but its arrangement and adapta- tion of them are not. But of course it has a great relevance to history in a different way. It does not record truthfully what happened, but it shows what men believed and felt. - Ibid. p. 535. †The reasons for this lack are several. First, it may be simply an inability to rise beyond a single occasion to the conception of a detached - Ibid. p. 10. art. The present so absorbs and occupies them that they feel no need to traffic with the past and the imaginary. -Ibid. p. 12.