பக்கம்:இலக்கிய மரபு.pdf/69

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

காவியம் 65 வீரனுடைய காலத்திலேயே அவனுடைய வாழ்வில் நிகழாத வற்றைக் கற்பனை செய்து சேர்த்துப் பாடுதல் அரிது. ஆகவே உண்மையல்லாத கற்பனைகள் சேர்வதற்குச் சில காலம் கழிதல் வேண்டும். ஆயின் அதற்குள் அவனுக்கு நிகரான மற்றொரு வீரன் நாட்டில் தோன்றுவானானால், அத் தகைய கற்பனைகள் பிறக்க இடமில்லாமற் போகும். அறிவாற்றல் சீனம் பழைய நாகரிக வரலாறு உடைய நாடாக இருந்தும், தமிழ் போல் அம்மொழியிலும் மிகப் பழைய இலக்கியத்தில் காவியங்கள் இல்லை. அதற்கு உரிய கார ணத்தை ஆராய்ந்தவர், சீன நாகரிகம் அறிவாற்றல் மிகுந்த தாய் வளர்ந்திருந்தமையே அதற்குக் காரணம் என்பர்* தமிழர் நாகரிகத்திலும், கற்பனையைவிட அறிவு வளர்ச்சி மிக்கிருந்ததும் பெரிய காவியங்கள் தோன்றாமைக்கு ஒரு காரணம் எனலாம். அறிவாற்றல் மிக்கவர்கள் ஒருபுறம் பண்பட்ட தனிப் பாட்டுக்களை - ஒரு சிலர் போற்ற வல்ல திறம் மிக்க ஓவியங் கள் போல் - எழுதிய போதிலும், அதே காலத்தில் பெரும்- பான்மையோரின் இன்பத்திற்காக வேறொரு சாராராகிய புலவர் கற்பனை மிக்க வீர காவியங்களையும் இயற்றியிருக் கலாம். சென்ற நூற்றாண்டில் பெரும் புலவர்களின் படைப்புக்கள் ஒருபுறம் இருந்த போதிலும் தேசிங்குராசன் கதை முதலியவைகள் தோன்றவில்லையா? அதற்கு முன்பும் அவ்வாறே அல்லியரசாணிமாலை முதலியவைகள் Though the Chinese possessed the seeds of a heroic poetry, they did not allow them to grow. The explanation perhaps is that the great intellectual forces which set so lasting an impress on Chinese civilisation were hostile to the heroic spirit with its unfettered individualism and self-assertion. Ibid.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/69&oldid=1681913" இலிருந்து மீள்விக்கப்பட்டது