________________
70 இலக்கிய மரபு பல நிகழ்ச்சிகளை அடுத்தடுத்து அறிய வேண்டி நேர் தலால் அவை உடனுக்குடன் பழையன ஆகிச் சிறப்பிழந்துவிடு கின்றன. மக்களின் உள்ளத்தில் எதுவும் நின்று ஆழப் பதிவதில்லை. பழங் காலத்தில் சிறு சிறு நாட்டு நிகழ்ச்சிகளே மக்களுக்குத் தெரியும்; அவைகளும் உடனே மக்களுக்கு எட்டாமல், காலம் கடந்து எட்டும்; அதற்குள் அந்த நிகழ்ச்சிகள் திரிந்து கற்பனை மெருகேறி வெவ்வேறு வடிவம் பெற்றுவிடும்;* கேட்ட மக்களின் உள்ளத்தில் சுவையான கதைகளாய் நிலைத்து நிற்கும். ஆகையால் காவியங்கள் எழுதத் தக்க வகையில் அவை வளர்ச்சி பெறல் முடிந்தது. காவியங்கள் இக் காலத்தில் தோன்ற முடியாமைக்கும், தோன்றினும் நிலைக்க முடியாமைக்கும் மற்றொரு காரணம், பழங் காலத்தில் மக்களின் உள்ளத்தில் குடிகொண் டிருந்த வர்கள் போன்ற தன்னிகர் இல்லாத் தலைமக்களை இப் போது காவியங்களில் படைக்க முடிவதில்லை. மக்களிடையே சமத்துவ உணர்ச்சி வளர்ந்துவிட்டமையால், யாவரும் எத்தகைய தலைமக்களையும் தம் போன்றவர்களாகவே மதிக் கும் மனப்பான்மை வளர்ந்துவருகிறது. ஆகையால், காவியத் தலைவர்களாக விளங்கக் கூடிய சிறப்பு யாருக்கும் இல்லாமற் போகின்றது. மற்றொரு காரணம், அரிய பெரிய செயல்களைப் பழங் காலத்தில் போற்றியது போல் இக்காலத்தில் போற்றுவ தில்லை. மாறாக, உளப்பான்மையையும் பண்புகளையும்
- At the outset it is obvious that much recorded in heroic poetry cannot be true. Even poems which seem to concern historical persons and to have an inkling of historical events tell of some things which are plainly fabulous. -C.M. Bowra, Heroic Poetry, p. 510. †The days of the hero and the crowd seem to be over; it is the day of the equality of men and of the organisation of effort.
-C. T. Winchester, Some Principles of Literary Criticism, p. 274.