3. நாடகம்
பாட்டு : நாடகம்
நாடகம் செய்யுளாலும் அமையலாம்; உரைநடை யாலும் அமையலாம். செய்யுள் வடிவில் நாடகம் அமை தல் போற்றத் தக்கது என்றும், பாட்டு நன்கு விளங்கும் இடமாக உள்ளது நாடகமே என்றும் அறிஞர் எலியட் என்பவர் கருதுகிறார்.* மிக உயர்ந்த பாட்டு, மிகக் கடின மான பாட்டு அத்தகைய நாடகமே என்று வின்செஸ்டர் கூறுகிறார். நாடகம் இயற்றுவதற்குப் பெரு முயற்சியும் கற்பனை வளமும் தேவை. ஏன் எனில், ஒருபுறம் அது காவியம் போல் உணர்ச்சியோடு கதை சொல்லும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்; இன்னொரு புறம், கதையைப் புலவர் கூறாமல், நாடக மாந்தரே (பாத்திரங்களே) கூற வேண்டியிருத்தலின், தன்னுணர்ச்சிப் பாட்டுக்களைப் போல் உணர்ச்சிகளை நேரே வடிக்கும் திறன் பெற்றிருத்தல் வேண்டும். யன வரலாற்று நாடகத்தில் பழங் காலத்து உடை முதலி அமைதல் போலவே, உண்மை மிகாமல் கற்பனையியல்
- The ideal medium for poetry, to my mind, and the most direct means of social usefulness for poetry, is the theatre.
-The Use of Poetry and the Use of Criticism, p. 153. The drama is the highest and most difficult kind of poetry. It calls into exercise a greater range of poetic power than any other, for it combines what is highest and most characteristic in both the epic and the lyric. -C. T. Winchester, Some Principles of Literary Criticism, p. 277.