________________
நாடகம் 75 இரு புலனுக்கும் உரியது நாடகம் கண்ணாலும் செவியாலும் நுகரத் தக்க கலை யாகும். கண்ணினும் செவியினும் திண்ணிதின் உணரும் உணர்வுடை மாந்தர்க்கு அல்லது தெரியின்
நன்னயப் பொருள்கோள் எண்ணருங் குரைத்தே. என்று தொல்காப்பியர் கூறியது நாடகக் கலைக்கும் பொருந் தும். இந்த இருவகைப் புலன்களுக்கும் விருந்தாக வல்ல நாடகம் அமைப்பவர், இருவகைச் சுவையும் குன்றாத வகை யில் அமைக்கவேண்டும. கண்ணுக்கு விருந்தளிக்கும் வகை யில், மெய்ப்பாடு விளங்க நடிக்கும் நடிப்புத் திறனும் வேண் டும்; செவிக்கு விருந்தளிக்கும் வகையில், உணர்ச்சி பொங் கும் உரையாடலும் வேண்டும்.) உரையாடல் மட்டும் சிறந்து நின்றாலும் போதாது; நடிப்புத்திறன் மட்டும் மிக்கிருந் தாலும் போதாது.நாடக ஆசிரியர் ஒருவர் ஒத்திகை நடத் தும்போது,இடையே ஒருநாள் தம் செவிகளைப் பொத்திக் கொண்டு காண்பாராம். அப்போது தான் நடிப்பில் போதிய மெய்ப்பாடுகள் உள்ளனவா என்பதும், போதிய செயல் கள் உள்ளனவா என்பதும் விளங்கும் என்று அவர் கருதினார். அவ்வாறே கண்ணை மூடிக்கொண்டு, குருடர் போல் செவி மட்டும் கொண்டு நாடகத்தைக் கேட்டறிந்தா லும் சுவை பயக்கும் வகையில் உரையாடல்கள் சிறப்பாக அமைய வேண்டும். சுருங்கக் கூறின், செவிடரும் இன்புறக் கூடிய வகையில், குருடரும் மகிழக் கூடிய வகையில், நாட கத்தில் நடிப்பும் உரையாடலும் ஒருங்கே அமையவேண்டும். நாடக மேடை நாடக இலக்கியத்தை ஆராயும்போது, அரங்கில் நடிக் கப்படும் நாடகம் பற்றிய ஆராய்ச்சி இன்றியமையாததாக தொல்காப்பியம், பொருளதிகாரம், மெய்ப்பாட்டியல், 27.