________________
78 இலக்கிய மரபு பதும் இல்லை. நாடகத்தில் தனிமொழியாக நிகழும் பேச்சு அத்தன்மையானது மேடையில் மற்றவர்க்குக் கேளாதது போல் ஆனால் உண்மையில் எல்லோருக்கும் கேட்கும்படி யாகப் பேசும் ஒருபுறப் பேச்சும் அத்தன்மையானதே. நடிப்பவரின் மனச் சான்று அறிவுறுத்துவதாக அதன் குரலாக நிகழும் பேச்சும் அத்தகையதே. எழுதும் கடிதத் தைப் படிப்பதும், வந்த கடிதத்தை உரக்கப் படிப்பதும் வாழ்க்கையில் பொருந்தாதவை. ஆயின் நாடக மேடையில் பொருந்துகின்றன. நாடகம் காண்பவர்க்குக் கடிதத்தின் பொருளை உணர்த்த வேறு வழி இல்லாதபோது அவை கையாளப்படுகின்றன. அவை முதலானவை வாழ்க்கை யோடு இயையாதவை என்றும்,பொய் என்றும் உணர்ந்தும், வெறுக்காமல் நாடகம் காண்கின்றோம்; மகிழ்கின்றோம். தனிமொழி நாடகத்தில் நடிப்பவர் தமக்குத் தாமே கூறிக்கொள் வதாக அமையும் தனிமொழி சேக்ஸ்பியர் காலத்தில் செல் வாக்காக இருந்தது. அண்மைக் காலம் வரையில் தமிழில் நாடகம் எழுதியவர்களும் அந்த முறையை ஒட்டியே தனி மொழிகள் அமைத்தனர். இன்று எழுதப்படும் நாடகங் களில் தனிமொழிகளைக் காண்பது அரிது. நடிக்கும் மாந் தரின் வாயிலாகச் சில கருத்துக்கள் அல்லது உணர்ச்சிகள் வெளிப்பட வேண்டியிருந்தால், பிச்சைக்காரன், வேலையாள், நண்பன் முதலான யாரையேனும் படைத்து, அவனிடம் அந்தக் கருத்துக்களையோ உணர்ச்சிகளையோ கூறுமாறு செய்கின்றனர்; அல்லது, அந்தக் கதைமாந்தரின் மனச் சான்று அவருடன் பேசுவது போல் ஒரு குரல் மட்டும் கேட் பதாக அமைப்பர்; அல்லது, அவருடைய ஆவியே நிழல் போல் தனியே எதிரே நின்று பேசுவதாகவும் அமைப்பர். எவ்வாறோ வேறு வழிகள் அமைத்து, தனிமொழியாகக்