பக்கம்:இலக்கிய மரபு.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

மிகுந்தது. அத்தகைய நாடகம் போராட்டத்தை 83 அமைத்து, வாழ்க்கையின் பெரிய உண்மையை விளக்கிக் காட்டின், அது கற்பவரின் உள்ளத்தை ஈர்க்க வல்லதாகும்.* ஒரு புறம் குடும்பத்திற்கு உரிய கடமை, மற்றொரு புறம் காட்டுக்கு உரிய தொண்டு; ஒரு புறம் காதல், மற்றொரு புறம் வெளியுலக மதிப்பு; ஒரு புறம் நட்பு, மற்றொரு புறம் நீதி ; ஒரு புறம் நன்றியுணர்வு, மற்றொரு புறம் நேர்மை; ஒருபுறம் உணர்வின் தூண்டுதல்,மற்றொருபுறம் அறிவின் வற்புறுத்தல்; இவ்வாறு இவைகளை மோதவிட்டுப் போராட்டத்தை அமைத்தல் சுவை மிக்கதாகும். தீயவன் தீமை செய்து அழிவதாகக் காட்டுவதைவிட, நல்லவன் நன்மை கடைப்பிடித்துத் தியாகம் செய்து பிறர் சூழ்ச்சியால் மாய்வதைக் காட்டுதல் சிறந்தது என்பர். இணைவும் முரணும் நாடகத்திற்கு இணைவு (parallelism) என்றும், முரண் (contrast) என்றும் கூறப்படும் இருவகை அமைப்புக்கள் அழகு செய்தல் வேண்டும். அவற்றுள், இணைவு என்பது நாடகத்தின் மையமான ஒரு நிகழ்ச்சியோடு அது போன்ற மற்றொரு நிகழ்ச்சியும் அமைவதாகும். அந்த இரு நிகழ்ச்சி களும் ஒன்று மற்றொன்றை விளக்கி அரண் செய்வதாக அமைய வேண்டும். மனோன்மணீயம் என்ற நாடகத்தில் The essentially tragic fact is the self-division and Intestinal war- tare of the ethical substance, not so much the war of good with evil as the war of good with good. -A. C. Bradley, Oxford Lectures on Poetry, p.71. † Other things being equal (as they never are), the tragedy in which the hero is, as we say, a good man, is more tragic than that in which he is, as we say, a bad one. The more spiritual value, the more tragedy in conflict and waste. -Ibid. p. 89.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/87&oldid=1682010" இலிருந்து மீள்விக்கப்பட்டது