பக்கம்:இலக்கிய மரபு.pdf/88

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

84 இலக்கிய மரபு மனோன்மணியின் காதல் போலவே, வாணியின் காதலும் அமைதல் காணலாம். முரண் (conirast) என்பது, நாடகத்தின் கருவுக்கு மாறு பட்ட நிகழ்ச்சி அமைதல், அதன் கதைத் தலைவர்க்கு மாறு பட்ட பண்புடைய கதைமாந்தர் அமைதல் என்று இரு வகையாக அமைவதாகும். இவ்வாறுமுரண் அமைவதால், கதைக் கருவும் கதைமாந்தரின் பண்பும் சிறந்து விளங்கி நிற்கும். குறிப்பு முரண் அது முரண் அமைப்பில் மற்றொரு வகை உண்டு. நுட்பம் மிக்கது. மேடையில் நாடக மாந்தர் உணரத் தக்க வகையில் ஒன்று நிகழும். ஆனால் நாடகம் காண்பவர் அதற்கு மாறான வகையில் வேறோர் உணர்ச்சியும் அதனால் பெறுவர். ஒருவரைக் கொல்வதற்காக நஞ்சு கலந்த பால் கொண்டு வந்து தரப்படுவதாக நிகழ்ச்சி ஒன்று இருக்கும். அந்தப் பாலைக் கை நீட்டிப் பெறுபவர் முதலில் தாம் குடிக்காமல், கொடுத்தவர் முன்னே குடிக்க வேண்டும் என்று அவரிடம் தந்து வற்புறுத்துவார். அந் நிகழ்ச்சி யைக் காண்பவரின் உணர்ச்சி வேறு ; நடிப்பவரின் உணர்ச்சி வேறு. இவ்வாறு வேறுபட்ட உணர்ச்சி விளைப்பது நாடகத்திற்குச் சுவை பயப்பதாகும். இதை நாடகத்தின் குறிப்பு முரண் எனலாம். ஆங்கிலத்தில் dramatic irony என்பர். இத்தகைய குறிப்பு முரண், நாடக மாந்தரின் பேச்சிலும் அமைதல் உண்டு. நடிப்பவர் சொல்லும் சொல், அவர்க்கும் அதைக் கேட்கும் கதை மாந்தர்க்கும் விளைக்கும் உணர்ச்சி ஒன்றாகவும்,நாடகம் காண்பவர்க்கு விளைக்கும் உணர்ச்சி மற் றொன்றாகவும் அமையும்போது, அதுவும் குறிப்பு முரணாகும்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/88&oldid=1682008" இலிருந்து மீள்விக்கப்பட்டது