பக்கம்:இலக்கிய மரபு.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 87 தகைச்சுவை மிக்க நாடகங்களைப் பலரும் வரவேற்கிறார் கள். ஆழ்ந்து உணர்தல் இல்லாமல், மேற்போக்காக விளையாடி உணரும் உணர்ச்சியை நாடுதல் எக்காலத்திலும் மக்களுக்கு இயல்பே.* அமைதி குறைந்து, ஓய்வு குறைந்து, பரபரப்பும் வேகமும் மிகுந்துவிட்ட இக் காலத்தில், ஒருமுகச் சிந்தனைக்கும் ஆழ்ந்த உணர்ச்சிக்கும் உரிய ஆற்றல் குறைந்துவரக் காண்கிறோம். அதன் பயனாக, மேற்போக் கான நகைச்சுவை வேட்கை பெருகியுள்ளது எனலாம். விதிகள் விதிகளை மட்டும் உள்ளத்தில் கொண்டு அவற்றின்படி காடகங்கள் எழுதுவதில் பயன் இல்லை. அவற்றோடு, காடகமேடையையும் பார்க்கும் மாந்தரையும் கற்பனை செய்து, எவ்வெவ்வாறு அமைத்தால் சுவையும் கவர்ச்சியும் இருக் கும் என எண்ணிப்பார்த்து நாடகம் எழுதவேண்டும். சேக்ஸ்பியர் விதிகளைப் பற்றி அவ்வளவாகக் கவலைப் படாமல் நாடகங்கள் எழுதியவர்; அவரை அடுத்து அவர்காலத்தில் நாடகங்கள் இயற்றிய பென் ஜான்சன் என்னும் ஆங்கிலப் புலவர், விதிகளையே கண்ணும் கருத்து மாகப் போற்றியவர்; அவர் சேக்ஸ்பியரின் நாடகங்களை

  • The desire for "comic relief” on the part of an audience is, I believe, a permanent craving of human nature ; but that does not mean that it ought to be gratified. It springs from a lack of the capacity for concentration. --R. Williams, Drama from Ibsen to Eliot, p. 276.

† Shakespeare followed no rules and had no dramatic theory; Jonson was a classicist, whose masters were the ancients, and whose every play was composed on an established ancient pattern. -J. B. Wilson, English Literature, p. 104. Jonson's plays generally obey the rules of 'unity'; the action takes less than a day and the scene never moves from the initial setting- Venice in Volpone, a London house in the Alchemist. -J. B. Wilson, Epglish Literature, p. 104. எழுத்துணரியாக்கம்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/91&oldid=1682011" இலிருந்து மீள்விக்கப்பட்டது