பக்கம்:இலக்கிய மரபு.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 89 கலைஞர் மூவகை ஒருமைப்பாடுகளைக் கூறுவர். ஒரே செயல், ஒரே காலம், ஒரே இடம் என நாடகம் அமைய வேண்டும் என்பதே அவற்றின் கருத்து என்று பலர் கருதிவந்தனர். அவ்வாறாயின், சேக்ஸ்பியர் முதலான தேர்ந்த நாடக ஆசிரியர்களின் நூல்களில் ஒருவகை ஒருமைப்பாடும் இல்லை எனலாம். உண்மையை ஆராய்ந்தால், ஒரு செயல், ஒரு காலம்,ஓர் இடம் என்று குறுகி அமைவதைப் பற்றி இவை கூறவில்லை. செயல்கள் பலவும் ஒரு நோக்கத் தோடு இயை தலையும், பல காலத்து நிகழ்ச்சிகள் வரினும் எல்லாம் ஒருவகைத் தொடர்புற்று இயைதலையும், பல இடங்கள் வரினும் எல்லாம் ஒருங்கே இயை தலையும் இந்த ஒருமைப்பாடுகள் குறிப்பதாகக் கொள்ளுதல் பொகுந்தும். முடிவு வகை நாடகத்தின் முடிவை ஒட்டி இன்பியல் நாடகம் என்றும், துன்பியல் நாடகம் என்றும் இருவகையாகப் யகுப்பர். சில நாடுகளில் துன்ப முடிவை மக்கள் விரும்பு வதில்லை.ஆதலின் அந்நாடுகளில் நாடகங்கள் பலவும் இன்பியல் முடிவை உடையனவாக அமைப்பர். ஐரோப்பிய மொழிகளில், இன்பியல் நாடகம் (comedy) என்பது முடிவு மட்டும் இன்பமாக அமைவது அன்று; வழக்கமான அன்றாட வாழ்க்கையைப் பற்றி அமைந்து, அவ் வளவாக விழுப்பம் இல்லாத பொருள்கள் பற்றியதாய், மனிதர் மாறுபட்ட சக்திகளோடு போராடும் போராட்டத்தில் வெற்றி பெறுவதாகக் கூறுவதாகும் என்பர். துன்பியல் நாடகம் (tragedy) என்பது துன்பமான முடிவு மட்டும் உடையது அன்று; குறிக்கோளான உயர்ந்த வாழ்க்கை யைப் பற்றி அமைந்து, விழுப்பமான பொருள்கள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/93&oldid=1681999" இலிருந்து மீள்விக்கப்பட்டது