பக்கம்:இலக்கிய மரபு.pdf/99

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

நாடகம் 95 கம் நடத்துவோர்க்குத் தேவையான குறிப்புக் கோவை யாக- அமைந்துவிடுகிறது.* பழைய நாடகங்கள் பல நாடுகளில் நாட்டியக் கலையும் நாடகக் கலையும் இணைந்தே வளர்ந்து அமைந்தன. தமிழ்நாட்டிலும் அந்த நிலைமை இருந்துவந்ததைக் 'கூத்து' என்ற பழைய சொல் விளக்குவதாகும். கூத்தர் பொருநர் என்ற பெயரால் கலைஞர் வாழ்ந்து நடன நாடகக் கலைகளை வளர் த் துவந்தனர் என்பதுதொல்காப்பியம் முதலான பழைய நூல்களால் தெளிவாகின்றது ; வசைக் கூத்து,புகழ்க் கூத்து, வேத்தி யல் கூத்து,பொதுவியல் கூத்து, வரிக்கூத்து, வரிச்சாந்திக் கூத்து, சாந்திக் கூத்து, ஆரியக் கூத்து, தமிழ்க் கூத்து, இயல்புக் கூத்து, தேசிக் கூத்து முதலான பலவற்றின் குறிப்புக்கள் அடியார்க்கு நல்லார் - என்பவரின் உரையில் காணப்படுகின்றன. பத்தாம் நூற்றாண்டில் இராஜராஜேசு வர சோழவேந்தன் காலத்தில் 'இராஜராஜேசுவர நாடகம் என்பது ஆண்டுதோறும் நடிக்கப்பட்டுப் போற்றப்பட்டு வந்தது என்பதைத் தஞ்சாவூர்க் கோயில் கல்வெட்டினால் அறியலாம். திருநெல்வேலி மாவட்டத்துச் சீவல்லீ சுவரத் துக் கோயில் கல்வெட்டிலும், உய்யவந்தாள் யசோதை

  • It is no surprise that in these circumstances the author's contri-- bution is often merely a script, rather than a self-sufficient work of art.. It is a common place that the text of a successful modern stage play is. usually disappointing, and rarely has any literary merit. For the dramatist is aware of theatrical practice; he knows that he cannot enforce an exact stage presentation. In most cases, then, he will com- promise, and will be content to provide a sketch, a 'treatment,' of a certain theme, which the creative and interpretative talents of others will bring to full expression.

-R. Williams, Drama from Ibsen to Eliot, p. 30.. சிலப்பதிகாரம், 3. 12. அடியார்க்கு நல்லார் உரை,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:இலக்கிய_மரபு.pdf/99&oldid=1681980" இலிருந்து மீள்விக்கப்பட்டது