பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/103

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

90

பாடிய புலவரை மக்கள் "செம்புலப் பெயல் நீரார்" எனச் சிறப்பித்துள்ளனர். இவரது இயற்பெயர் தெரியவில்லை.

  மற்றொரு புலவர் காதல் நோயின் கடுமையைப் பற்றி சிறந்த நயந் தோன்றப் பாடியுள்ளார். பாறையிலே வைக்கப்பட்டிருந்த வெண்ணெய் ஞாயிற்றினது வெப்பக் கொடுமையால் உருகி வழிய ஆரம்பிக்கிறது. அதனைக் காவல் புரிபவனே கையில்லாத முடவன், முடவனால் உருகும் வெண்ணெயை எவ்வாறு வேறிடத்தில் எடுத்து வைக்க முடியும் ? மேலும் அவன் ஒர் ஊமையனும் ஆவான். எனவே பிறரை உதவிக்கு அழைக்கக் குரலும் இல்லை. இத்தகைய ஊமையனைப் போன்று தலைவனால் காதல் நோயின் கொடுமையைத் தாங்கவும் முடியவில்லை; அதனைப் பிறர்க்கு உணர்த்தவும் இயலவில்லை. இதனை,
  "கையில் ஊமன் கண்ணில் காக்கும் 
   வெண்ணெய் உணங்கல் போலப் 
   பரந்தன்று இந்நோய் நோன்றுகொளற் கரிதே"

என்று குறுந்தொகை கூறுகின்றது. . குறுந்தொகையிலே பல புவர்களின் பெயர்கள் காரணப் பெயர்களாகக் காணப்படுகின்றன. அவர்கள் பாடியிருக்கும் பாடல்களில் அமைந்திருக்கும் சொற்றொடர்களே அவர்களது பெயர்களாக உள்ளன. அவை வருமாறு:

   குப்பைக் கோழி பார் - குப்பைக் கோழி (பா. 305
   ஒரில் பிச்சையார் - ஒரில் பிச்சை (பா. 277) 
   மீனெறி துாண்டிலார்-மீனெறி துாண்டிலின்’ (பா. 54) 
   அணிலாடு முன்றிலார்-அணிலாடு முன்றில் (பா. 41) 
   விட்ட குதிரையார் - விட்ட குதிரை (பா. 74)

இவ்வாறு பல பெயர்கள் குறுந்தொகையில் காணப்படுகின்றன.