பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 92 "மாரி வாய்க்க; வளம் பல சிறக்க'. "பசியில் லாகுக: பிணிசேண் நீங்குக". "பால் பல ஊறுக, பகடு பல சிறக்க"; "விளைக வயலே; வருக இரவலர்". "நெற்பல பொலிக பொன் பெரிது சிறக்க".

      ஐங்குறு நூற்றுப் பாடல்களில் பொருள் நயம் சிறந்து காணப் பெறுகின்றது.தோழியின் உதவியால் தலைவி ஒருத்தி தன் உள்ளங் கவர்ந்த கள்வனோடு ஒரு நாள் நள்ளிரவி. வீட்டைத் துறந்து சென்று விடுகின்ருள். மறுநாள் காலை இதனை அறிந்த தாய் அலமந்து மனம் நொந்து தன் மகளே , தேடிவர ஆட்களை அனுப்பினாள். அவர்கள் தலைவியைக் காணாது திரும்பி வரவும், தாய் பலவாறு அழுது புலம்பினுள். இதனே தாயிரங்கு பத்திலுள்ள பின்வரும் பாடல் சுவை படக் கூறுகின்றது.
  "இதுவென் பாவை பாவை, இதுவென் பூவைக்கு இனியசொற் பூவை, எனது அலமரு நோக்கின் தலம்வரும் சுடர்துதல் பைங்கிளி எடுத்த பைங்கிளி, என்றிவை காண்டொறும் காண்டொறும் கலங்க

நீங்கின ளோவென் பூங்களுளே’. இந்நூலில் பல நயமிக்க உவமைகள் பொருளுக் கேற்றவாறு பொருத்தமுற புலவர்களால் கையாளப்பட்டுள்ளன். மேலும் அவை இனிமை மிகப் பயக்கின்றன. குரங்கு தன் மேலிருந்து பாய்வதால் வளைந்து உடனே நிமிரும் சிறிய மூங்கிற் கழை மீனெறி துாண்டில் போல் நிவந்து தோன்றும் என்று கூறியிருப்பதும், அவரையினை நிரம்பத் தின்ற மந்டு, பண்ட வாணிகர் பை போலத் தோன்றும் என்று கூறியிருப்பதும், தினத் தாள்களில் இருந்த குருவிகள் பறந்து எழு வ தும் விழுவதுமாகக் கலாபம் விரித்து ஆடிச் செல்லு , மஞ்ஞையானது பந்தாடும் மகளிர் போலத் தோன்றும் என்று பாடியிருப்பதும் இன்பம் பயப்பனவாகும்.