பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

93

  இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்னே சிறப்புடன் விளங்கிய கமிழ் நாட்டு நகரங்கள் பற்றிய செய்திகளையும். வறியோர்க்கு வரையாது வழங்கிய வள்ளல்கள், வீரமிக்க தமிழ்ப் பெரு வேந்தர்கள் ஆகியோர் பற்றிய வரலாற்றுச் செய்திகளையும் இந்நூலிலே காணலாம்.

பதிற்றுப்பத்து

  பதிற்றுப்பத்து என்ற நூல் அகவற் பாவாலான புறப்பொருள் நூலாகும். இந்நூல் பத்துச் சேர மன்னர்களைப் பற்றியது; பத்துப் புலவர்களால் பாடப்பெற்றது. சேர பன்னர் தம் வலிமையும், அவரது ஆட்சியில் சீரும் சிறப்பாக வாழ்ந்த தமிழ் மக்களின் உயர்ந்த நாகரிகமும் இதன் எண் பரக்கக் காணப்பெறும். எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றான புறநானுாறு உலகத்திற்கு வேண்டிய நன்மைகளைப் பாடிற்று. பதிற்றுப்பத்து நாட்டிற்கு, அந் நாட்டின் உயிர் நிலையான மன்னனுக்குப் பாடிற்று. நாட்டு வளம், அந்நாட்டு மக்களின் வாழ்க்கை, அரசரது படைவீரம், கொடைத் திறன் முதலியவற்றினைப் பற்றி இந்நூல் பெரிதும் பேசுகின் றது. இந்நூலின் முதல் பத்தும், இறுதிப் பத்தும் கிடைக்கப் பெறவில்லை. ஏனையவற்றில் பாடப்பட்ட அரசர்களும் அவற்றைப் பாடிய புலவர்களின் பெயர்களும் முறையே கீழே தரப்பட்டுள்ளன.
   இரண்டாம் பத்து - இமயவரம்பன் நெடுஞ்சேரலாதன் - குமட்டுர்க் கண்ணனார்
   மூன்றாம் பத்து - பல்யானைச் செல்கெழு குட்டுவன்

- பாலைக் கெளதமஞர்.

   நான்காம் பத்து -களங்காய்க் கண்ணினார் - முடிக்சேரல்காப்பியாற்றுக் காப்பியஞர். 
   ஐந்தாம் பத்து - கடல் பிறக் கோட்டிய செங்குட்டுவன்

- பரணர்.

   ஆறாம் பத்து - ஆடுகோட்பாட்டுச் சேரலாதன்;காக்கைப் பாடினியார் நச்செள்ளையார்.