பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/111

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

98

தொகுத்தவர் நல்லந்துவனர் என்ற ஆசிரியராக இருத்தல் வேண்டும் என்பது கலித்தொகை இறுதியில் காணப்படும் வாசகத்தாலும், "நல்லந்துவனுர் கலித்தொகை" எனவழங்கும் வழக்கச் சொல்லாலும் தெரிய வருகின்றது. நூல் முழுவது ஒத்தாழிசைக் கலிப்பாவால் ஆகியதால் கலித்தொகை என்ற பெயருடையதாயிற்று. கடவுள் வாழ்த்து உட்பட நூற்றைப் பது பாடல்களால் ஆயது. கடவுள் வாழ்த்துச் செய்யுளைப் பாடியவர் மதுரை ஆசிரியர் நல்லந்துவளுர் ஆவார். சேரமான் பாலைபாடிய பெருங்கடுங்கோ, கபிலர், மருதனிள நாகளுர், சோழன் நல்லுருத்திரன் என்போர் இந் நூலில் முறையே பாலைக்கலி, குறிஞ்சிக்கலி, மருதக்கலி, முல்லைக்கலி இவற்றைப் பாடியுள்ளனர். நெய்தற்கலி, கடவுள் வாழ்த்துப்பா நல்லந்துவஞரால் பாடப்பெற்றுள்ளது. கற்றேர் ஏத்தும் கலித்தொகையின் சிறப்பைப் பின்வரும் பாடலால் அறியலாம்

"திருத்தகு மாமுனிசிந் தாமணி கம்பன்
விருத்தக் கவிவளமும் வேண்டேம்-திருக்குறளோ
கொங்குவேள் மாக்கதையோ கொள்ளேம் நனயார்வேம்
பொங்குகலி யின்பப் பொருள்."

கலித்தொகைப் பாடல்கள் அனைத்தும், சொற்சுவை. பொருட் சுவை, இசைச் சுவை முதலியன ஒருங்கு வாய்க்கப் பெற்றுள்ளன. இந்நூலுக்கு உரை கண்டவர் நச்சினர்க்கினியர். படிப்பவர் தம் உள்ளத்தைப் பறிகொடுக்கும் அளவிற்கு இன்பம் பயக்கும் பாக்கள் பல இந்நூலில் உள்ளன.

இயற்கைக் காதல் தோன்றிய வகையினைப் பற்றி இந் நூல் அழகுறக் கூறுகின்றது. ஒரு தலைவி தான் விரும்பும் தலைவன் யார் என்பதைத் தன் தோழியிடம் பின் வருமாறு கூறுகின்ருள். வளையலை அணிந்த தோழியே எனது மனத் தைத் திருடியவன் யார் தெரியுமா? முன்பு நாம் தெருவில் விகள யாடும்போது, நாம் கட்டும் மணல் வீட்டைக் காலால்