பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

 அன்னை அலறிப் படர் தரத், தன்னையான்
உண்ணு நீர் விக்கினன் என்றேன; அன்னையும் தன்னைப் புறம் அழித்து நீவ, மற்று என்னைக்
கடைக்கண்ணுல் கொல்வான் போல் நோக்கி, நகைக்
கூட்டப்
செய்தான் அக் கள்வன் மகன்"

என்று படிப்பவர் மனத்தை விட்டு அகல முடியாத வகையில் சுவைபடச் சித்திரித்துள்ளார். இது போன்ற பாடல்கள் பல இந்நூலில் காணப்படுகின்றன.

அகநானூறு மக்களின் ஐந்தினை ஒழுக்கமும் அழகுபட இதன் கண் கடவுள் வாழ்த்து நீங்கலாக நானுாறு பாடல்களால் கூறப் படுகின்றது. இதனைத் தொகுத்தவர் உருத்திரன் சன்மன் என்பவர் ஆவார். உக்கிரப் பெருவழுதி என்ற பாண்டிய மன்னன் தொகுப்பித்தவன் என்பர். இந்நூல் களிற்று யானை நிரை, மணி மிடை பவளம், நித்திலக் கோவை என்ற முர், திறப் பாகுபாடு உடையது. அகப்பொருள் நூல்களில் காலத்தால் முற்பட்டது அகநானுாறு ஆகும் என்பது ஒரு சில அறிஞர் கருத்தாகும். அகம் என்று இதனை அழைத்த, முறையே மக்கள் இதனைச் சிறப்பாகப் போற்றியதற்கு அறி குறியாகும். உள்ளத்தின் துடிப்புக்களை உள்ளவாறே சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் அழகு இந் நூலுக்கே உரிய தனிச் சிறப்பாகும். அகநானுாற்றுப் பாடல்கள் அகப் பொருளோடு புறப்பொருட் செய்திகளையும் கூறுகின்றன. எனவே தமிழர் தம் பண்டை நாகரிகத்தை அறிவதற்கும், தமிழக வரலாற்றைத் தெரிவதற்கும் இந் நூல் சிறந்ததொரு கருவி யாக விளங்குகின்றது. தமிழக வேந்தர்கள், குறுநில மன்னர்கள், வள்ளல்கள் இவர்களது வாழ்க்கை வரலாறுகள், அவர்கள் செய்த போர்கள், பெற்ற வெற்றிகள், பண்டு நம் பைந்தமிழ் நாட்டிலே சிறந்து விளங்கிய ஊர்கள், துறை முகங்கள் ஆகியவை பற்றிய செய்திகள் ஆகிய அனைத்தும் இந்நூலிலே காணப்பெறுகின்றன. அகநானூற்றுப்