பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

102

என்று வினவி, பின்னர் எங்களை நேரே பார்த்ததோடமையாது, உன் மகளின் மையுண்ட கண்களைப் பல முறை நோக்கினேன். உன் மகளும் அவனை நோக்கினுள்." இதுபோன் , சுவை மிக்க பல பாடல்களை அகநானுாற்றிலே காணலாம்

புறநானுாறு புறப்பொருள் பற்றி எழுந்த நூற்களுள் ஒன்றன புநானுாற்றின் கண் அரசன் முதல் ஆண்டிவரையில், கிழவோர் முதல் இளையோர் ஈருக,ஆடவரும் பெண்டிரும், குலம், தொழில் வேறுபாடின்றிப் பாடிய பாடல்கள் விளங்குகின்றன. வாழ்க்கையைப் பற்றிய ஒவ்வொரு துறையிலும் பாடல்கள் எழுந்தன. இப்பாடல்களை நோக்குங்கால், இவற்றைப் பாடிய மக்கள் எவ்விதச் செயற்கை முயற்சி மின்றி இயற்கை உணர்வுமிக்குப் பாடிய சிறந்த வாழ்க்கைப் பாட்டுக்களாகப் புலப்படுகின்றன. மக்கள் வாழ்க்கை பாட்டிலே இயங்கிற்று. நண்பர்கள் பாட்டிலே பேசிக் கொண்டனர். அரசன் பாட்டின் மிடுக்கிலே உணர்வும் உரமும் பெற்றுப் பகைவர்களைத் தாக்கினன். வெற்றி வெறியிலே இறுமாந்து கிடந்த மன்னன, உலக வாழ்வின் உண்மையைக் குடைந்து பார்த்த சாதாரனப் புலவன் நிலையாமையை அறிவுறுத்தி அறவழியிலே அமைதி பெறச் செய்தான். இத்தகைய உணர்வின் உயிர்ப்பு எஞ் ஞான்றும் வாழ்க்கையில் தொடர்ந்து இருப்பதில்லை. எனவே ஒரொருகாலை உணர்வால் உந்தப் பட்டு உண்மை பொங்கி வெளிப்படுகின்ற காலத்திலேதான் புலவன் பாடினன். எனவே அக்காலப் புலவன் உணர்வை வேண்டி அழைத்து உழன்று பாடி ஆயிரமாயிரமாகப் பாட்டுக்களைச் சொற்கோவையாக யாத்து இலக்கியம் அமைத்தானில் லை புலவன் வாழ்க்கையிலே சாதாரணமாகக் குறைந்த பாக் களே பாடினன். எனவே பழங்கால மக்கள் வாழ்விலிருந்து இலக்கியம் திரட்ட முயன்ற மக்கள் அன்னர்தம் வாழ்க்கை பபிலே நண்பர்களோடு'நண்பர் அளவளாவுகின்ற அன்பிற்கும்,