பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

105

அடிப்படையாகக் கொண்டிலங்க வேண்டும் என்று அவர்கள் கருதினர். இதனை,

 “கடுஞ் சினத்த கொல்ளிறும், கதழ் பரிய கலிமாவும்,
நெடும் கொடிய நிமிர்தேரும், நெஞ்சுடைய புகல் மறவரும், என நான்குடன் மாண்டது ஆயினும்,
மாண்ட- அறநெறி முதற்றே அரசின் கொற்றம்"

என்று மதுரைமருதன் இளநாகனார் என்ற புலவர் நயம்படப் பாடியுள்ளார்.

பண்டைத் தமிழ் மன்னர்கள் அறப்போரே ஆற்றினர். தக்க காரணமின்றிப் போர் தொடுத்தலில்லை. மேலும் அவர்கள் போரால் மக்களுக்கு இன்னல் ஏதும் ஏற்படாத வாறு பாதுக்காக்கவும் செய்தனர். இதனே, பாண்டியன் பல்யாகசாலை முதுகுடுமி என்பவனைப் பற்றி நெட்டிமையார் என்னும் புலவர் பாடிய பின்வரும் பாட்டால் அறியலாம்.

 "ஆவும் ஆன் இயல் பார்ப்பன மாக்களும்,
பெண்டிரும், பிணியுடையீரும், பேணித்
தென்புலம் வாழ்நருக்கு அரும் கடன் இறுக்கும்
பொன்போல் புதல்வர்ப் பெருஅதிரும்
எம் அம்பு கடிவிடுதும், தும் அரண் சேர்மின், என
அறத்தாறு துவலும் பூட்கை, மறத்தின்
கொல்களிற்று மீமிசைக் கொடி விசும்பு நிழற்றும்
எம்கோ வாழிய குடுமி!"

எந்த முறையில் வாழ்ந்தால் இவ்வுலகில் வாழும் எல்லாமக்களும் இன்புற்று வாழலாம் என்பதைப் பின்வரும் பாடல் கூறுகின்றது.