பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/119

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

106

"உண்டால் அம்ம ! இவ்வுலகம் இந்திரர்
அமிழ்தம் இயைவ தாயினும் இனிது எனத்
தமியர் உண்டலும் இலரே; முனிவு இலர்;
துஞ்சலும் இலர், பிறர் அஞ்சுவது அஞ்சிப்
புகழ் எனின் உயிரும் கொடுக்குவர்,
பழியெனின் உலகுடன் பெறினும் கொள்ளலர், அயர்விலர்;
அன்னமாட்சி அணையராகித் தமக்கென முயலா நோன் தாள் பிறர்க்கென முயலுநர் உண்மையானே".

எல்லோரும் இன்புற்றிருக்க வழிகாட்டும் இப்பாட லைப் பாடியவர் கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி யாவார். இவை போன்ற பல உயர்ந்த கருத்துக்களைப் புறநானுரர் றிலே காணலாம்.

இதுவரை எழுதியவாற்ருல் பண்டைத் தமிழ் வேந்தர் களின் ஆட்சி முறை, நீதிமுறை, போர்ச் செய்திகள், வாணிகம், தொழில்கள், கலைகள், பண்டைத் தமிழ்மக்களின் மன வாழ்வு, சமுதாய வாழ்வு, அவர்களின் நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள் ஆகிய பல செய்திகளையும் உலகினர்க்கு எடுத்துக்காட்ட வல்லன.எட்டுத்தொகை நூல்கள் என்பது எளிதிற் பெறப்படும். மேலும் தமிழ்ப் புலவர்களை மன்னரும் செல்வரும் போற்றிப் புரந்த செய்திகளையும். புலவர்கள் மன்னர்கள் தவறிழைத்தால் அஞ்சாது அறமுரைத்து அவர்களை நல்வழிப் படுத்திய செய்திகளையும் இந்நூல்களிலே பரக்கக் காணலாம்.