பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/128

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

115 எறிந்தனர். எனில், அந்நாட்டு மக்களது செல்வ வளத்தை என்னென்று கூறுவது ? இதனை, வியன் முற்றத்துச் சுடரர்த்து தன் மடநோக்கி னேரிழை மசளி ருணங்குளுக் கவருங் கோழி யெறிந்த கொடுங்காற் கணங்குழை பொற்காற் புதல்வர் புரவி பின்றருட்டு முக்காற் சிறுதேர் முன்வழி விலக்கும்' என்று ஆசிரியர் நயம்படக் கூறியுள்ளார். சோலைகளும் நீர்நிலைகளும் பந்தியிலே நிற்கும் குதிரைகளைப் பிணித்துள்ளது போல உப்பு வணிகரின் படகுகள் தறிகள் தோறும் கட்டப்பெற்ற உப்பங்கழிகளைச் சூழந்த சோலைகளும், பார்ப்பவர்களுக்கு மழ்ச்சியையும், புதிய வருமானமும் தருகின்ற தோட்டங்களும், அவைகளின் பக்கங்களிலே பூஞ்சோலைகளும் எங்கும் காணப்பட்டன. அத்துடன் மழை மாசு நீங்கின ஆகாயத்திடத்து மதியைச் சேர்ந்த மகமாகி வெள்ளி பனி மீனினது வடிவு பொருந்தின வலியையுடைய உயர்ந்த கரையையுடைய

அங்கு காணப்பட்டன. இதனை ஆசிரியர் 
மழை நீங்கிய மாவிசும் பின் மதி சேர்ந்த மகவெண்மீ னுருகெழுதிறலுயர் கோட்டத்து முருகமர் முரண் கிடக்கை வரியணி சுடர் வான் பொய்கை'

என்று கூறியுள்ளார். இங்கு மதியினையும் மீனையும் பொய் கைக்கும் கரைக்கும் உவமிக்கும் பொருள்களாக ஆசிரியர் கையாண்டிருப்பதும், மனம் பொருந்தின பூ நிறத்தால் தம்முள் மாறுபட்ட பரப்பாலே பலதிற மனித்த ஒளிபிகளபுடைய பொய்கைகள் என்று கூறியிருப்பதும் இலக்கிய இன்பம் பயப்பனவாகும்.