பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/129

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

16

மேற்கூறியவை தவிர, இம்மையிலும் மறுமையிலும் காம இன்ப நுகர்ச்சியினை நல்கும் இணைந்த ஏரிகளும் பட்டினத்தில் இருந்தன. அறம் கிலைஇய அட்டிற்சாலைகள் அறம் நிரம்பிய அந்நகரில் வாழ்வோர், வருவோர்க்கு எல்லாம் உணவு இட்டனர். இதற்காகவே அட்டிற் சாலைகள் பல அந்நகரிலே நிரம்ப இருந்தன. அவ்வட்டிற்சாலைகளின் கதவுகளில் புலிச் சின்னம் பொறிக்கப்பட்டிருந்தது. இரு கதவுகளும் இடைவெளியின்றிப் பொருத்துவாயைப் பெற்று விளங்கின. மேலும் அவ்வட்டிற் சாலைகள் திருமகள் தங்கும் மதிலினைக் கொண்டிருந்தன: அட்டிற்சாலைகளில் வடித்த சோற்றிலிருந்து வெளிப்படும் கொழுகஞ்சி ஆற்றின் வெள்ளம்போல் எங்கும் பரவி நின்றது. அக்கஞ்சியைப் பருகுவதற்குச் சென்ற இடபங்கள் ஒன்றோடொன்று தாக்கிப் பொருதமையில்லை அக்கொழு கஞ்சி மண்ணோடு கலந்து செருகியது. அத்துடன் பல தேர்கள் ஓடுகையிலே அச்சேறு தூளியாயிற்று. அத்துள்ளி சிறந்த சித்திரங்களை உடைய வெள்ளிய கோயில்களை மாசுபடுத்தியது. அந்நிலையில் அக்கோயில்கள் புழுதியை மேலே பூசிக்கொண்ட யானையைப்போல அழுக்கேறி விளங்கின. இக்காட்சியை, அறநிலைஇய வகனட்டிற் சோறுவாக்கிய கொழுங்கஞ்சி யாறுபோலப் பரந்தொழுகி யேறு பொரச் செருகித் தேரோடத் துகள்கெழு நீராடிய களிறுபோல வேறுபட்ட வினையோவத்து வெண்கோயின் மாசூட்டும்" என்று பட்டினப்பாலை பகர்கின்றது.