பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

119 தெய்வமாக வழிபட்டனர். அத்துடன் அவர்கள் வெண் டாளியினது தண்ணிய பூவாற் செய்த மாலையினையுடைய மடல் தாழை மலர் மலைத்தும், இனிய பனைபிற் கள் உண்டும், நெற்கள் கள உண்டும் விளையாடி மகிழ்ந்தனர், கரியமலையைச் சேர்ந்த செக்கர் போலவும் தாய் தழுவிய குழவி போலவும் தெளிந்த கடலினது திரையோடே காவிரி ஒன்றுபடுகின்ற இடம் கண்ணையும் கருத்தையும் கவரும் வண்ணம் விளங்கியது. இதனை ஆசிரியர், 'மாமலை அனந்த கொண் முப் போலவும் தாய் முலை தழுவிய குழவி போலவும் தேறு நீர்ப் புணரி யொடு யாறுதலே மணக்கும்" என்று சிறந்ததோர் ஓவியமாகவே தீட்டிக் காட்டுகின்றார், இங்கு ஆசிரியர், கரிய உயர்ந்த திரையின் மீதே சிவந்த ஆற்று நீர் பரந்ததற்கு முதல் உவமையினையும் கடலும் காவிரி யாறும் ஒன்றுபடுதற்கு இரண்டாவது உவமையினையும் மிகப் பொருத்தமாகக் கையாண்டிருப்பது, பட்டினப்பாலை ஆசிரியர் உவமைகளின் கருவூலமாக விளங்குகிறார் என்பதற்குச் சிறந்த சான்றாகும். கடலோடு காவிரி கலக்கும் புகார்முகத்தே, பரதவர்கள் இது நீங்கக் கடலாடியும், மாசு போகப் புனல் படிந்தும், ஞெண்டுகளை ஆட்டியும், எழுந்துவரும் திரையினை உழக்கியும், பாவைகளைப் பண்ணியும், ஐம்பொறிகளால் நுகர்வன வற்றை நுகர்ந்து மயங்கியும், ஒருவரை ஒருவர் நீங்காத காதற்கிழமை பூண்டவராய்ப் பகற் பொழுதெல்லாம் விளையாடி நின்றனர். பகற்பொழுது நீங்கி மாலையும் வந்தது. இன்ப இரவு இரவுப்பொழுது அனைவர்க்கும் இன்பத்தைத் தந்தது: பெறர்க்கு அரும் துறக்கம் ஒக்கும் நெடிய கால்களையுடைய மாடத்தே மக்கள் இருந்து இனிய இசை கேட்டும், நல்ல