பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120 நாடகம் கண்டும் வெள்ளிய நிலவிற் பெறும்பயனை நுகர்ந் தனர். கள்ளுண்டலை நீக்கிக் காமபானத்தை உண்டு மகிழ்ந் தனர். பட்டு நீக்கி இரவுக் காலத்திற்குரிய மெல்லிய வெள்ளிய ஆடையை அணிந்து மகளிர் கணவரைக் கூடி கங்குல் வந்ததும் கண்துயின்றனர். அத்துடன் இன்பமயக்கத்தினால் மைந்தர் கண்ணியை மகளிர் சூடினர். மகளிர் கோதையை மைந்தர் பெற்றனர். இஃது இவ்வாறிருக்க, பரதவர் கட்டுமரத்திலிருந்து கொண்டு மாடங்களில் எரியும் விளக்குகளை எண்ணி மகிழ்ந்தனர். உலகு செய்வோர் கடையாமப் பொழுதில் சுங்கங் கொள்வோர் தம் கடைமையினின்றும் வழுவாமல் அரசனுக்குச் சேரவேண்டிய சங்கவரியினைச் சுணங்காது பெற்றுத் தம் பணியினைப் பாங்குடன் செய்தனர். காவிரியாறு புத்தம் புதிய பூக்களின் மணத்தைத் திரட்டிக் கொண்டு வந்து, தூய எக்கர் மணலில் சேர்த்தது. அம்மண லில் அவர்கள் சிறிது நேரம் கண்ணயர்ந்து பின் தம் கடமையில் கருத்தூன்றினர். வெள்ளிய பூங்கொத்துக்களையுடைய தாழையினையும் கடற்கரையினை யும் உடைய பண்டசாலைத் தெருவில் அரசனது பொருளைப் பிறர் ஏய்த்துச் செல்லாமல் சுங்கப்பொருள் பெற்றுத் தம் காவல் தொழிலைச் செய்தனர். கதிரவன் தேரில் கட்டிய குதிரையைப் போல சுறுசுறுப்பாகச் சுற்றி வந்து இயங்கி அவர்கள் தங்களது கடமையை ஆற்றினர். இதனைப்பட்டினப்பாலை, "தொல் இசைத் தொழில் மாக்கள் காய் சினத்த கதிர்ச் செல்வன் தேர் பூண்ட மா போல வைகல் தொறும் அசைவு இன்றி உல்கு செய’’ என்று எடுத்துக் காட்டுகின்றது.