பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/139

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 126 விளக்கை ஏற்றி வைத்து, மலர்துாவி, மெழுகி அழகுபடுத்திய கோயில்களுக்கு மக்கள் வந்து தொழுது சென்றனர். அத்தகைய சிறப்பு வாய்ந்த கோயில்களின் துாண்களில் இப்பொழுது பெரிய நல்ல களிறுகளுடனே பிடிகள் கூடித் தங்கின. இவ்வாறு தெய்வம் உறையும் அம்பலங்கள் யானைகள் தங்கும் சாலைகளாக மாறின.

      நறிய பூக்களைத் தெருவில் துாவிக் கூத்தர் ஆடவும், அதற்குத் துணையாக முழவும் யாழும் இசைக்கவும் நடந்த பெருவிழாக்கள் ஒழிந்தன. அவ்விழாக்கள் நடந்த மன்றங்கள் பாழ்பட்டன. நெருஞ்சி முள்ளும் அறுகம் புல்லும் அம் மன்றங்களில் செறிந்தன. கூத்தர் ஆடிய அம்மன்றங்களில், நரிகளும் ஆந்தைகளும் ஆண்டலேப் பறவைகளும் கூவி ஓல மிட பேய்கள் துவன்று ஆடின.
  வருகின்றவர்க்கு வற்றாது சோறு அளித்த வளம் நிறைந்த அட்டிற் சாலைகளில் உயரமான திண்னைகளில் பைங்கிளிகள் மிழற்றின. மக்கள் அவற்றிற்குப் பால் ஊட்டி வளர்த்தனர். அத்தகைய வளமிக்க இடங்கள் எல்லாம் தம் பொழுது பாழ்பட்டுப் போயின. செருப்பணிந்த போர் வீரர்கள் அவ்விடங்களே மிதித்துப் பாழ் படுத்தினர். வில்லைத் தாங்கிய கொள்ளையர் அவ்விடங்களில் புகுந்து நெல்லே எல்லாம் வாரி எடுத்துச் சென்றனர். இல்வாறெல்லாம் பகை

வர் தம் ஊர்கள் பாழ்படுத்தப்பட்டன.

    பகைவர் தம்மைப் பதை பதைக்கச் செப்த திருமாவளவன் மலையை மண்ணாக்குவான்; கடலைக் கட்டாந்தரையாக்குவான்; வானத்தைக் கீழ்வீழ்த்தலைச் செய்வான்; காற்றை இயங்காமல் விலக்குவான். இவற்றையெல்லாம் ஆசிரியர்,

"மலை அகழ்க்குவனே கடல் துார்க்குவனே

வான் வீழ்க்குவனே வளிமாற்றுவன்"