பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/140

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 127 எனறு சுட்டிக்காட்டியுள்ளார், சுருங்கக் கூறின், இவன் முன்னிய துறைகளில் எல்லாம் வினைகளை வீரமுடன் முடித்து வெற்றியே கண்டான். இவனைக் கண்டு அஞ்சி ஒளிநாட்டார் ஓடி ஒழிந்தனர். அருவாளர் அஞ்சி ஒடுங்கினர். வடவர் வாடி நின்றனர். குடவர் கூம்பி நின்றனர். பாண்டியன் பதைத்து நின்றான். இருங்கோவேள் இருந்த இடம் தெரியாது மறைந்தான். ஆனால் திருமாவளவனே பகைவர் மதிலைத் தரைமட்டமாக்கும் யானைப்படையைக் கொண்டு விளங்கினன். அவன் கண்சிவந்து சினந்து நோக்கிய பொழுதெல்லாம் பகைவர் பட்டொழித்தனர்.

திருமாவளவனின் கோலின் செம்மை

      திண்ணிய தோளுடைய திருமாவளவன் தன் நாடெங்கணும் திருவிளங்கச் செய்தான். காட்டினை அழித்து நாடாக்கினான். தூர்த்த குளங்களைத் தொட்டு வளம் பெருக்கினன். உயர்ந்த மாடங்களை உடைய உறந்தை நகரை உயர்வுடன் விளங்கச் செய்தான். கோயில் பல கட்டினன். பழங்குடிகளை நிலைக்கச் செய்தான். வாயிலும் புழையும் அமைத்து ஞாயில் தோறும் அம்புக் கட்டுக்களைக் கட்டினான். அவனுடைய தலைநகர் வெற்றித் திருமகள் நிலைபெற்ற மதிலுடன் விளங்கியது. அம்மதிலின் ஒளியைக் கண்ட மாத்திரத்தே பகைவர் முகஒளி மங்கியது.

இரத்தினங்களை உரசிய மிகுந்த வலிமை பொருந்திய வீரக்கழலைத் தரித்த கால்களை உடைய திருமாவளனது மார்பில் பொற்றொடிப் புதல்வர் தவழ்ந்து விளையாடிய காரணத்தாலும், மெய்ம்முழுதும் அணிந்த அணிகலன்களை உடைய அவனது அழகிய மகளிர் அவனது மார்பைத் தழுவிய காரணத்தாலும் அவன் மார்பில் அணிந்திருந்த சந்தனம் அழிந்தது. இவ்வாறாக அரிமா அன்ன அணங்குடைத்துப்பினை உடையவனாகத் திருமாவளவன் திகழ்ந்தான். அவன் வேல்