பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/21

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

8

குத் தன்மைக் கூற்று முறையே அவருக்குக் கைவந்த உத்தியாகப் பயன்படுவதைக் காண்கிறோம்.

பாத்திரப் படைப்பு

நாவல்களைப் படைக்கும் பொழுது,நாவலாசிரியர் முதலில் கவனிக்க வேண்டிய கூறு பாத்திரங்களின் படைப்புகளேயாகும்.பாத்திரங்ளை உயிர்த் துடிப்பு உடையனவர்களாகச் செய்து, வெவ்வேறு நடையும் பேச்சும் எண்ணமும் பெற வைத்து. கதையின் வளர்ச்சியிலேயே அவை இணைந்து இழையுமாறு ஆக்கி, கதைப் பின்னலில் தொய்வு விழாதபடி இறுக்கமும், ஒட்டமும் நிலவச் செய்வது ஆசிரியரின் கடமையாகும். கதைப் பின்னல்,பாத்திரங்கள் இரண்டும் ஒன்றுபட்டுப் பொருத்தி நடக்கும் வகையில் டாக்டர் மு.வ.வின் நாவல்கள் அமைந்துள்ளன.'தமிழ் மொழியளவில் உள்ள நாவல்களை நோக்குமிடத்துக் கதைப் பின்னலே அடிப்படை யாகக் கொண்ட நாவல்களே மலிந்துள்ளன.பாத்திரங்களைக் கொண்டு நாவல்கள் அமைக்கப்படும் இயல்பு இன்னும் தமிழ் நாட்டில் நன்கு அமையவில்லை.பேராசிரியர் டாக்டர் மு.வரதராசனார் இத் துறையில் முதல் முயற்சி செய்து, செந்தாமரை' என்றதொரு நாவல் அமைத்தார் என்று பேராசிரியர் அ.ச.ஞான சம்பந்தம் 'இலக்கியக் கலை என்னும் தமது நூலில் கூறி இருப்பதைக் கொண்டு டாக்டர் மு.வ. நாவல்களில் பாத்திரங்களைப் படைக்கும் தன்மையை நாம் ஒருவாறு உணரலாம். டிக்கன்ஸ், தேக்கரே,ஸ்காட் போன்றவர்களுடைய நாவல்கள் தம் சிறப்பில் சிறிதும் குறையாமல், அதே சமயத்தில் முழுவதும் பாத்திரங்களால் சிறப்புப் பெற்ற நாவல்களாக விளங்குவது போன்று,டாக்டர் மு.வ.வின் நாவல்களும் அவற்றின் பாத்திரங்களில் சிறப்புடையனவாகத் திகழ்கின்றன."பாத்திரங்கள். கதையின் கட்டுக்கோப்பு என்று வேறாகப் பிரித்துச் சொல்ல வேண்டியதில்லை. பாத்திரங்களின் இயக்கத்தில் கதைப் பின்னல் உருவாகிறது. கதைப் பின்னலினால் பாத்திரங்கள்