பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/23

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

10

காணலாம். அவர் படைத்துள்ள பாத்திரங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு கருத்தைப் பிரதிநிதித்துவப்படுத்துவதைக் காண்கிறோம். "கரித்துண்டில்" வரும் பேராசிரியர் கமலக் கண்ணனை முதலாளித்துவக் கொள்கையின் பிரதிநிதியாகக் காட்டியுள்ளார். அதே நாவலில் வரும் குமரேசனே முதலாளித்துவத்திற்கு நேர் எதிரிடையான சமதர்மக் கொள்கையின் சின்னமாகச் சித்திரிக்கிறார். புத்தகத்தை மூடினதும் கதையின் நிகழ்ச்சிகள் மறந்து போனுலும் அதில் வரும் கதை மாந்தர்கள் நம் கண்முன் நடமாடுகிறார்கள்.


நடையழகு

நாவலின் சிறப்புக் கூறுகளுள் ஒன்று அதில் வரும் உரையாடலாகும். உரையாடல்தான் ஒரு நாவலில் மிகவும் மகிழ்ச்சியை யளிக்கும் பகுதியாகும். உரையாடல்தான் நாவலில் தோன்றும் பல பாத்திரங்களுடைய மனம், பண்பு, குறிக்கோள், உணர்ச்சிகள் முதலியவற்றை நமக்கு எடுத்துக் காட்டும் கண்ணாடி. "நாவலாசிரியன் நாடகத் தன்மையை எட்டிப் பிடிப்பது உரையாடலின் மூலம்தான்" என்கிறார் அறிஞர் ஹட்சன் (Hudson). சிறந்த நாவலாசிரியன் கையில் இவ்வுரையாடல் சிறந்த பயனை அளிக்கும். டாக்டர் மு. வ. தமது நாவல்களில் உரையாடலை மிகவும் நளினமாகக் கையாண்டிருப்பதைக் காண்கிறோம். கதைப் போக்கிற்கும், பாத்திரங்களுக்கும் ஏற்றவாறு உரையாடல்களே அமைத்துள்ளார். கதாபாத்திரங்களின் உணர்ச்சிகள், கருத்துக்கள் ஆசாபாசங்கள் இவைகளைக் காட்டக் கூடிய வகையில் அவர் உரையாடல்கவிப் புகுத்தியுள்ளார். "கள்ளோ காவியமோ" நாவலில் அருளப்பனுக்கும் அவன் நண்பன் வேங்கடசாமிக்கு மிடையே நடைபெறும் உரையாடல் ஆழ்ந்தகன்ற சிந்தனைகளை வெளிப்படுத்துவதாக உள்ளன. சிறந்த சீர்திருத்தக் கருத்துக்களையும், புரட்சிக் கொள்கைகளையும் அவர் தம் பாத்திரங்களின் உரையாடல் வாயிலாகப் பேச வைக்கிறார் எனினும் அது பிரசாரமாக நமக்குத் தோன்றுவதில்லை.