பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

19 ஆனால் அவர் கண்ட காட்சியிலே பலாக் கனிகள் சிவலிங்கங்கமாகத் தோற்றமளிக்கின்றன. அத்துடன் பலாக்கனிகளின் உள்ளே இருக்கும் சுளைகளும், சுளைகளுக்கு உள்ளே இருக்கும் கொட்டைகளும் அவருக்கு நினைவில் வராமல் போகவில்லை. அவைகளும் சிவலிங்கங்களாகவே தோன்றுகின்றன. இதோ! அவர் கண்ட காட்சி:

கிளைகளாய்க் கிளைத்தபல கொப்பெலாஞ் சதுர்வேதம் கிளைகள் ஈன்ற ஆளைபெலாம் சிவலிங்கம் கனியெலாம் சிவலிங்கம் சிவலிங்கம் கனிகள் ஈன்ற சுளையெலாம் சிவலிங்கம் வித்தெலாம் சிவலிங்க சொரூபம் ஆக விளையுமொரு குறும்பலவின் முளைத்தெழுந்த சிவக் கொழுந்தை ...............”

களமும் காட்சியும் : குறவஞ்சி நூல் சிறந்த நாடக இலக்கியமாகவும் விளங்குகின்றது என்று முன்னர் கூறப்பட்டது, அஃதாவது அந்நூல் இலக்கிய அமைப்போடு நாடக அமைப்பும் கொண்டு - வாங்குகின்றது. எந்த நாடகமும் கடவுள் வாழ்த்தோடுதான் தொடங்கப் பெறும் என்பதை நாம் அறிவோம். அதற்கேற்ப இந்த திகில் கடவுள் வாழ்த்து அமைந்திருப்பதை நாம் கண்டோம். நாடகம் பல களங்களைக் கொண்டிருக்கும் என்பதை நாம் அறிவோம். ஒவ்வொருகளமும் பல காட்சிகளைக் கொண்டிருக்கும். காட்சிகள் தடையேதுமின்றி, விறுவிறுப்பாக நடைபெறுதல் நல்ல நாடகத்தின் நலன்களில் ஒன்றாகும். அதற்கேற்ப நாடகமாந்தர் சுறுசுறுப்பாக இயங்கின் நாடகம் சுவையுள்ளதாக விளங்கும். இப்பண்பு நலன்களை எல்லாம் இக்குறவஞ்சி நாடகத்திலே நாம் காணலாம். இந்நூலினை