பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/34

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

21


பகுதி 3 :

1. குறத்தி வருதல் , 2. குறத்தி மலைவளம், நாட்டுவளம் முதலியன கூறல் , 3. குறத்தி திரிகட நாதர் சிறப்புக் கூறி,குறியின் திறமும் கூறல். 4. குறத்தி குறி சொல்லல்; 5.தலைவி குறத்திக்குப் பரிசளித்தல்.


பகுதி 4 :

1. சிங்கன் குளுவளுேடு வேட்டைக்கு வருதல் , 2. சிங்கியை நினைத்துச் சிங்கன் வருந்துதல் , 3. அதனைத் தன் நண்பனிடம் கழறல், 4. சிங்கியைத் தேடிக் காணாமல் வருந்துதல் , 5. மீண்டும் தன் நண்பனுக்குக் கழறல்.


பகுதி 5 :

1.சிங்கன் சிங்கியைக் காணுதல்;

2.சிங்கன் சிங்கியை மகிழ்வித்தல்;

3.சிங்கனும் சிங்கியும் எதிர்த்துரையாடல்.


ஊடக உறுப்பினர்கள்

கருங்கிய கால எல்லையில் நாடக ஆசிரியன் கதைப் முழுவதையும் நாம் காணுமாறு செய்ய வேண்டியுள்ளது என்பதை நாம் நன்கு அறிவோம். எனவே நாடக ஆசிரியன் இன்றியமையாத பகுதிகளை மட்டும் நாடகத்தில் இடம் பெற வைக்கிறான். எத்துணை சிறந்த நாடகமாயினும் அது நாடகத்தின் எழுத்துகளுக்கும் அப்பாற்பட்ட, நடிகர், உறுப்பு, காட்சி அல்லது களம் என்பவற்றின் கூட்டுறவாலே தான் முழுமை பெற முடியும். உறுப்பு, காட்சி, ஆகியன _ வஞ்சியில் இயற்கையாக அமைந்திருப்பதை நாம் முன்னர் கண்டோம். அடுத்து நாடக மாந்தர்களை ஆசிரியர் எவ்வாறு படைத்துள்ளார் என்பதை நாம் _ காணுவோம்.

நாடகத்திற்குத் தலைவனும், துணைத் தலைவனும், தலைவி - தோழனும், தோழியும், பிற உறுப்பினர்களும் வேண்