பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

 29 குற்றாலநாதரின் குன்று அழகைக் கண்ட குறவஞ்சித் தலைவியின் உள்ளத்தில் எத்தனையோ எண்ண அலைகள் எழுந்தன. விடையில் ஏறி வந்த இவர் விந்தைக்காரரே! இவர் காந்தச் சித்தரோ? நாகத்தைப் புயத்தில் கட்டி, நஞ்சினைக் கழுத்திலே கொண்டு தனது பாகத்தில் பச்சைக்கிளி போல் ஒரு பெண்ணை (உமை) வைத்ததோடு, பெரு விருப்பத்தின் காரணமாக மற்றொரு பெண்ணை (கங்கை) முடியில் வைத்துள்ள இந்தச் சித்தர் யாரோ? இவரது மெய்யின் சிவப்பழனையும், வலக்கையில் கொண்டுள்ள மழுப்படையினது அழகையும் மையார் விழியால் கண்டால் மயங்காரோ என்றெல் லாம் எண்ணிய தலைவி தன் உள்ளத்தைக் கவர்ந்த சித்தர் குற்றால நாதராகத்தான் இருக்க வேண்டுமென்று முடிவு செய்கின்றாள். இதனை, 'அருட்கண் பார்வை யாலென் அங்கந் தங்கமாக உருக்கிப் போட்டார் கண்ட உடனேதான் பெருக்கம் பார்க்கில் எங்கள் திருக் குற்றாலர்போலே இருக்கு திவர்செய் மாயம் ஒருக்காலே' என்று கவிராயர் கரும்பனைய த மிழில் சுட்டிக் காட்டியுள்ளார். :அருட்கண் பார்வையாலென் அங்கந் தங்கமாக உருக்கிப் போட்டார்' என்று ஆசிரியர், காம நோயால் துன்புறுவோரது உடலில் காணும் வெப்பினையும், அதன் காரணமாக உடல் நிறத்தில் காணும் மாறுதலையும் இயற்கையாகச் சொல்வது போல் பாடியிருப்பது உண்மையிலேயே இன்புறத் தக்கதாகும். அடுத்து தோழியர் குற்றாலநாதரது புகழைக் கூறக் கேட்டு வசந்தவல்லி, முனி பரவும் இனியானே, வேத முழுப்பலவின் கனி தானே, கனியில் வைத்த செந்தேனே' என்று பலவாறு இறைவனைப்பற்றி எண்ணி வியந்து அவனிடத்து தனது கருத்து அழிந்து நின்றாள்; தன்னை மறந்தாள். இதனைக் கண்ட தோழியர் புலம்பி அவளுக்காக.