பக்கம்:இலக்கிய மலர்கள்.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

30 வருந்தினர். பின்னர் அவர்கள் அவளுக்குச் சந்தனக் குழம்பு பூசியதோடு அவளது அருகிருந்து கதைகளும் கூறினர். ஆனால் வசந்தவல்லியோ அது கால் காய்ந்து கொண்டிருந்த நிலவைப் பலவாறு பழித்துரைத்தனள். இப்பகுதி மிகவும் சுவைபயப்பதொன்றாகும். குளிர்ந்த அமுதத்துடன் திருப்பாற் கடலில் தோன்றிய நிலா கடலின் குளிர்ச்சியை மறந்தது ஏனோ என்றும், திருமகளாகிய பெண்ணுடன் பிறந்த நிலா, வசந்தவல்லி ஒரு பெண்ணாக இருந்தும் அவளைச் சுடுவது ஏனோ என்றும் வசந்த வல்லி வெண்ணிலாவைப் பார்த்துக் கேட்டதும் உள்ளத்தை உருக்குவது ஆகும். இதனை ஆசிரியர், தண்ணமுதுடன் பிறந்தாய் வெண்ணிலாவே அந்தத் தண்ணளியை ஏன்மறந்தாய் வெண்ணிலாவே பெண்ணுடன் பிறந்ததுண்டே வெண்ணிலாவே என்றன் பெண்மை கண்டுங் காயலாமோ வெண்ணிலாவே' என்று சுட்டிக் காட்டியுள்ளார். வெண்ணிலாவைப் பழித்துக்கூறிய வசந்தவல்லி மன் மதனையும் பழித்துரைக்க, அது கால் பண்புடைய பாங்கி வந்து வினவ, அவள் தான் வெள்ளி விடையில் வந்த பெம்மானைக் கண்டு உணவும் உறக்கமும் அற்றுவிட்டதாகக் கூறினாள்: அதனைக் கேட்ட பாங்கி வசந்தவல்லியைப் பழித்துரைக்க அவள் திரிகடநாதரைப் புகழ்ந்து பாங்கிக்குக்கூற, பின்னர் பாங்கி அவளுக்கு அறிவுரை கூற, இறுதியாக வசந்தவல்லி பாங்கியைத் திருக்குற்றால நாதரிடத்துத் தூது செல்ல வேண்டினாள். இஃது இவ்வாறிருக்க, குறி சொல்லும் குறத்தி, கையிலே மாத்திரைக்கோல் ஏந்தி, அத்துடன் மணிக்கூடையும் தாங்கி வீதியிலே வந்தனள்.

  குறவஞ்சியின் சிறப்பு

குறவஞ்சியின் சிறப்பை, தோற்றத்தை, அவள் வரும் காட்சியை ஆசிரியர் மிக மிகச் சுவை பயப்பதாகப் பாடி